Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 April 2023

கன்னி குரு பெயர்ச்சிப் பலன்கள் 2023

கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்


எல்லோரும் நல்லவராக இருந்து முடிந்தவரை அனைவருக்கும் உதவும் கன்னிராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசியை நேருக்குநேர் பார்த்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மேஷத்தில் சென்று மறைய இருக்கிறார். அஷ்டம குரு செயல்களில் தடுமாற்றத்தைத் தருவாரோ என்று கவலைப் பட வேண்டாம். உபய ராசியான கன்னியா ராசிக்கு குருபகவான் பாதகாதிபதி. அப்படிபட்டவர் 8 -ல் மறைவது கெடுபலன்கள் குறைந்து நற்பலன்களையே கொடுக்கும்.

இனி கணவன் மனைவிக்குள் இருந்த வருத்தங்கள் நீங்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலைகள் தாமதமாக முடியும். செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

குருபகவான் ராசிக்கு 2, 4, 12 ம் வீடுகளைப்பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்களெல்லாம் முடிவுக்கு வரும். மகிழ்ச்சி தங்கும். வீண் சந்தேகம் தீரும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. ஆடை ஆபரணங்கள் சேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இதுவரை இருந்துவந்த உடல் சோர்வு, அசதி, வீண்அலைச்சல், டென்ஷன் நீங்கும். பிதுர்வழி சொத்துகள் கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் உங்கள் ராசிக்கு தனபாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் திடீர் வெற்றி, வாகனயோகம், ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் செல்வதால் அரசு விஷயங்களில் கவனம் தேவை. தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.

குருபகவானின் வக்ர சஞ்சாரம் - 11.9.2023 முதல் 20.12.2023 வரை

குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். கணவன் - மனைவிக்குள் தேவையற்ற சச்சரவுகள் வந்து நீங்கும்.

வியாபாரிகள் : தேவையான பண உதவி கிடைக்கும். தொழிலில் ஆர்வம் பிறக்கும். கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் வாய்க்கும். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிப்பது நல்லது. பங்குதாரர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்கள் : மேலதிகாரி இனி உங்கள் திறமையை அங்கீகரிப்பர். எதிர்பார்த்த பதவியுயர்வு தேடி வரும். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது வாய்ப்புகள் அமையும். திறமைக்கேற்றபடி பாராட்டு, பதவியுயர்வு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி செலவுகளை அதிகமாக்கினாலும், சொத்து சேர்க்கையையும், அலைச்சலையும் அதே நேரம் ஆதாயத்தையும் தரும்.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES