மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
அவசரப்பட்டுக் காரியம் செய்யாமல் அனைத்துக்கும் காலம் கனியும் வரை காத்திருந்து சாதிப்பவர்கள் மீன ராசிக்காரர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சலையும் தீராத சிக்கல்களையும் கொடுத்துவந்த குருபகவான், தற்போது நகர்ந்து 2 ம் இடத்துக்குச் செல்கிறார். இரண்டாம் இடம் தன குடும்ப வாக்குஸ்தானம். இது ஓரளவு நல்ல பலன்களை உங்களுக்குத்தரும். 22.4.2023 முதல் 1.5.2024 வரை குருபகவான் 2-ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் நீங்கும். குடும்ப ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் வீட்டில் நன்மையுண்டாகும்.
குடும்பத்தில் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். வரவேண்டிய தொகை கைக்குவரும். கடன்களின் ஒருபகுதியைப் பைசல் செய்வீர்கள். பெரிய நோய் இருப்பதைப்போன்ற மனபிரம்மை நீங்கும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்த்துப் பலன்தர இருக்கிறார். எதிர்ப்புகள் அடங்கும். பிறமொழி பேசுபவர்களால் நன்மைகள் உண்டாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். அயல்நாடுப் பயணங்கள் தேடி வரும். விசா சிக்கல்கள் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். புதிய வேலை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்த்துப் பலன்தர இருக்கிறார். எதிர்ப்புகள் அடங்கும். பிறமொழி பேசுபவர்களால் நன்மைகள் உண்டாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். அயல்நாடுப் பயணங்கள் தேடி வரும். விசா சிக்கல்கள் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். புதிய வேலை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை
குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் புது வீடு அமையும். அல்லது வசதியான காற்றோட்டம் உள்ள புதிய வீட்டுக்கு வாடகைக்குப் போவீர்கள். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும். மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்வீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி பயிலும் கனவு நனவாகும்.
23.06.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை
குருபகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பதவிகள் தேடிவரும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவரும் பாக்கியம் கிடைக்கும்.
17.4.2023 முதல் 1.5.2024 வரை
குருபகவான் சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்ய இருபதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதேவேளையில் உங்களின் மறைமுக எதிரிகள் தோற்று ஓடுவார்கள். குடும்பம் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபருடன் கலந்து ஆலோசிக்க வேண்டாம்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.2023 முதல் 20.12.2023 வரை
குருபகவான் வக்ர கதியில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் இந்தக் காலகட்டத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். அதே நேரம் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.
வியாபாரிகள் : இதுவரை நஷ்டத்தில் இயங்கிய உங்கள் தொழில் இனி சரியாகும். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சலுகை அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். லாபம் கணிசமாக உயரும். பணியாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். மே, ஜூன், ஆகஸ்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ஹோட்டல், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், பைனான்ஸ், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: பணிச்சுமை கொஞ்சம் குறையும். உழைப்புக்கேற்ற மரியாதையும் சலுகைகளும் கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்த்துக்காத்திருந்தவர்களுக்கு உரிய உயர்வு கிடைக்கும். மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார். சம்பள உயர்வு உண்டு. ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உங்கள் திறமையை நிரூபிக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். முக்கியப் பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பழைய சிக்கலான சூழலில் இருந்து உங்களை விடுவித்து எதையும் சாதித்துக் காட்டும் வல்லமையை அள்ளித் தரும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE