Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

20 September 2022

திருப்பதி லட்டு இக்கோயிலில் வழங்கப்படும் லட்டு சுவைக்கு முக்கிய காரணம்

ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள் என பக்தர் ஒருவர் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் புகழ்பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பதி கோயில் வைகானஸ ஆகம முறையைப் பின்பற்றி பூஜை நடைபெறும் கோயிலாகும். இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.


இந்த நடைமுறை கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பிரதாயமாகும். வழக்கமாக மற்ற கோயில்களில் வழங்கப்படும் லட்டை விட இங்கு வழங்கப்படும் லட்டு அளவில் பெரியது என்பதோடு, இதன் சுவையே அலாதியானது.


திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அள்ளிக்கொடுத்த பக்தர்கள்..எத்தனை கோடி தெரியுமா? திருப்பதி லட்டு இக்கோயிலில் வழங்கப்படும் லட்டுவின் சுவைக்கு முக்கிய காரணம் அதில்
 நெய், 
சர்க்கரை, 
முந்திரி, 
உலர் திராட்சை, 
பச்சைக் கற்பூரம், 
ஏலம், 
கற்கண்டு 
ஆகியவற்றுடன், அந்த வேங்கடவனின் முழுமையான அருளாசியும் கலந்திருப்பதாக காஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் பிரசித்த பெற்றது. 

ஏழுமலையான் தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், வருகை தரும் அனைவரும் தவறாமல் லட்டு பிரசாதத்தை வாங்கி செல்லாமல் இருப்பதில்லை. திருப்பதியில் ஆரம்ப காலகட்டங்களில் திருப்பொங்கம், இனிப்பு சுய்யம், அப்பம், வடை, அதிரசம், மனோகரம் என பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்தன. லட்டு வரலாறு கடந்த 1803-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணம் அமல்படுத்திய திருப்பதி தேவஸ்தான பிரசாத விநியோக முறையில் மாற்றம் செய்யப்பட்டு, பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர், 1940ஆம் ஆண்டு முதல் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

 லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த தொடக்கத்தில் அதன் விலை 8 அனாவாக இருந்தது. தற்போது பக்தர்களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதலாக கேட்பவர்களுக்கு ஒரு லட்டு ரூ.50க்கும் விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. திருப்பதி என்றாலே லட்டுதான் வருடாந்திர பிரம்மோற்சவ காலங்களில் குறைந்த பட்சம் 5 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்யப்படுகின்றன. திருப்பதி லட்டு சாதாரணமாக ஒருவர் கைக்கு வந்துவிடாது. 

எப்படி ஏழுமலையான் மனம் வைத்தால் தான், நாம் அவரை தரிசிக்க முடியுமோ, அது போலவே, அவனின் அருளாசி பூரணமாக நிறைந்துள்ள லட்டும் அவன் மனது வைத்தால் தான் நம் கைக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கையாகும். சர்க்கரை அதிகம் இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

 திருமலை அன்னமய்யா பவனில் நேற்று காலை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பக்தர்களின் நிறை குறை மற்றும் கோரிக்கைகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கேட்டறிந்தார். அப்போது அவரிடம் ஆந்திர மாநில பக்தர் ஒருவர் சுவாரசியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

 ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா என்ற பக்தர் நிர்வாகியிடம் பேசுகையில், திருமலையில் பக்தர்களுக்கு நல்ல முறையில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், என் தரப்பில் ஒரு கோரிக்கை தான் முன்வைக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளதால், எங்களை போன்ற சர்க்கரை நோயாளிகள் அதை உண்ண முடியவில்லை. கையில் வாங்கி பார்த்து கண்களில் ஒற்றிக்கொள்ள மட்டும் தான் முடிகிறது.

 எனவே, எங்களைப் போன்ற சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களும் லட்டு பிரசாதம் சாப்பிட ஏதுவாக லட்டின் இனிப்பு அளவை வைத்து பிரசாதம் தயாரித்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை வைத்தார். பக்தரின் கோரிக்கையை கேட்டறிந்த நிர்வாகி தர்மா ரெட்டி, இது தொடர்பாக நிச்சயம் ஆலோசித்து முடிவு எடுப்போம் என உறுதியளித்ததாக செய்தி வெளியானது. தள்ளி விடலாமா? அதேபோல் மற்றொரு பக்தர் ஒருவர் நீண்ட தூரத்தில் இருந்து பல மணிநேரம் செலவு செய்து சுவாமி தரிசனம் செய்ய நாங்கள் வருகிறோம். அப்படி இருக்க தரிசிக்க வரும் பக்தர்களை கர்ப்பக்கிரகம் வரும் போது அதிகாரிகள் "ஜருகண்டி, ஜருகண்டி" என அவசர அவசரமாக தள்ளி விடுகிறார்கள். இதனால் எங்களால் முழு மனதுடன் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் போகிறது.

 பக்தர்களிடம் அவர்கள் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார். பக்தரின் கோரிக்கையை கேட்ட அதிகாரி தர்மா ரெட்டி இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் தொடராது இருக்கும் விதமாக அவர்களை எச்சரிக்கிறேன் என அந்த பக்தரிடம் உறுதியளித்தார். திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு இதனிடையே இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையில்லா லட்டு பிரசாதம் வழங்கப்படுவதாக கடந்த இரண்டு, மூன்று நாட்களாக சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என அறிவித்துள்ளது.

 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையில்லா லட்டு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி தவறானது என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. புவிசார் குறியீடு திருப்பதி கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுக்கு புவிசார் குறியீடு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கடலைமாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே அளவில் சேர்த்து, லட்டுவின் சுவை, அமைப்பு மற்றும் எடை மாறாமல் இருக்கும் வகையில் லட்டு தயார் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், சர்க்கரை சேர்க்காமல் லட்டு என்ற பெயரில் வழங்கினால், திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது வெறும் மாவு உருண்டை என்று பக்தர்கள் கூறுவார்கள். சர்க்கரை சேர்த்த லட்டுதான் சரி சர்க்கரை நோயாளிகளின் வேண்டுகோளின்படி சர்க்கரையில்லா லட்டு வழங்கப்பட்டால், நாளை வேறு சில பக்தர்கள் வேறு சில காரணங்களுக்காக வேறு சில பிரசாதம் கேட்பார்கள், அவர்களும் வழங்க வேண்டும். எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட லட்டு பிரசாதம் மட்டுமே வழங்குவதுதான் முறையானது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES