Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 December 2021

TNPGTA மாநில மையச் செய்திகள்

தோழமைகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். மாநில நிர்வாகிகளின் முதல் கூட்டம் இன்று ( 3.12.2021) நமது மாநில அலுவலகத்தில் நடைபெற்றது .

மாநில நிர்வாகிகள் கூட்டத்தை மாநிலத் தலைவர் இரா . பெருமாள்சாமி அவர்கள் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் சே .பிரபாகரன் முன்னிலையில் கோரிக்கைகள் அனைத்தும் சிறந்த முறையில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளின் விவரங்கள் .

1.மாநில செயற்குழு 26.12.2021 அன்று பெரம்பலூரில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது .

2. சங்கத்தை விரைந்து புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

3. கடந்த ஆண்டுகளில் மாவட்டத்திற்கு வழங்கப் பட்ட உறுப்பினர் சந்தா புத்தகத்தின் அடிக்கட்டு மற்றும் மீதமுள்ள புத்தகத்தை ஒப்படைத்தால் மட்டுமே அதை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சங்கத்தைப் புதுப்பிக்க இயலும் என்பதால் மாவட்ட நிர்வாகிகள் அவற்றை விரைந்து ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. மாநில நிர்வாகிகள், மாநிலத் துணைத் தலைவர்கள்,மாவட்டத் தலைவர்கள் , மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டப் பொருளார்கள் கொண்ட TNPGTA வாட்ஸ்ஆப் குழு துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் சந்திப்பு

பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களிடம் முதுகலை ஆசிரியர்கள் நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

நமது கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்த ஆணையர் அவர்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைய உள்ளன நிச்சயமாக நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

அதேவேளையில் ஆசிரியர் பணிப் பாதுகாப்பு குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து வருந்திக்கூறிய ஆணையர் அவர்கள் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

10-03-2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு அரசிடமிருந்து உரிய ஆணை பெற்று ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்ற தகவல் பெறப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளி சார்ந்த தகவல்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2016ம் ஆண்டிலிருந்து பணிநியமனம் பெற்று, நியமன ஒப்புதல் இல்லாமையால் ஊதியம் பெறாமல் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. உண்மைத்தன்மைக்காக சில பள்ளிகளின் பெயர்களை குறித்துக்கொண்ட ஆணையர் அவர்கள், அரசாணை எண்165, நாள் 17.9.2019க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பெயர். பள்ளி. பாடம், நியமன நாள் ஆகியவற்றை பட்டியலடக் கேட்டபடியால், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக மாநில அமைப்பிற்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநிலக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

என்றும் இயக்கப் பணியில்...

மாநிலப் பொதுச் செயலாளர்

💐💐💐💐💐💐💐💐💐💐💐

ம.மகேந்திரன்

மாநிலச் செய்தி தொடர்பு செயலாளர்

TNPGTA

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES