Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 December 2021

அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்ந்த முக்கிய கோரிக்கைகள்


1) தமிழகம் முழுவதும் கன்னியாகுமரி, தூத்துகுடி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக கல்வியாண்டு துவக்கத்தில் முதுகலை ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் இன்றுவரை கல்வித் துறை அலுவலர்களால் பணிநியமன ஒப்புதல் (1.8 அன்று மாணவர் எண்ணிக்கை விவரம் பெறப்பட்டு ஆசிரியர் - பணியாளர் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டு) தரப்படாததால் ஊதியம் வாங்காமல் வாழ்வாதாரம் குறித்து மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் நடந்த உபரி ஆசிரியர் தொடர்பான வழக்கைக் காரணம் காட்டி தாமதம் செய்துவந்தனர். அந்த தீர்ப்பும் வந்து 8 மாதங்கள் ஆகிவிட்டபோதும் பணி நியமன ஒப்புதல் தரவில்லை.

பெரும்பாலான மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஒரு முதுகலை ஆசிரியர் மட்டுமே உள்ளதால் உபரி ஆசிரியர் வாய்ப்பு குறைவு. மேலும் இருக்கும் ஒரு பணியிடமும் நியமன ஒப்புதல் இன்றி உள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் இருக்க முதுகலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியேற்றுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை TNPGTA கேட்டுக்கொள்கிறது.

2) அரசுப்பள்ளிகளைப் போன்றே அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களே. ஏற்கெனவே நியமிக்கப்பட்டநிபுணர் குழு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10%இடஒதுக்கீடு அளிக்கலாம் என அறிக்கை வழங்கியது. ஆனால் 7.5% மட்டுமே வழங்கப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்ற பின் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொறியியல் கல்விக்கும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தியது வரவேற்கத்தக்கது

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முதல்வர் அவர்களுடன் ஆலோசித்து உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 2.5% இடஒதுக்கீட்டை மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளில் வழங்க ஆவண செய்யுமாய் TNPGTA கேட்டுக்கொள்கிறது.

தேர்வுத் துறை தொடர்பான கோரிக்கை

3)கடந்த காலங்களில் அரசுப் பொதுத்தேர்வின் போது துறை அலுவலர் தனி நபராக, வினாத்தாள் காப்பகத்திலிருந்து வினாத்தாளை தேர்வு மையத்திற்கு கொண்டுவந்து தேர்வு நடத்தி விடைத்தாட்களையும் தனிநபராகவே அஞ்சல் துறை மூலம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுப்பிவைப்பார். அதில் எங்கேனும் தவறு செய்ய வாய்ப்பிருந்ததால் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போதைய புதிய நடைமுறைப்படி வழித்தட அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு அவர் துப்பாக்கி ஏந்தியகாவலர் மற்றும் அலுவலக உதவியாளரோடு பாதுகாப்பாக வாகனங்கள் மூலம் வினாத்தாட்களை வினாத்தாள் காப்பகத்திலிருந்து தேர்வு மையத்திற்கு எடுத்து சென்று துறை அலுவலரிடம் முதன்மைக்கண்காணிப்பாளர் முன்னிலையில் ஒப்படைக்கிறார். தேர்வு முடிந்தபின்னர் விடைத்தாட்களை துறை அலுவலர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் பெற்று அதே முறையில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று திருத்தும் மையத்தில் ஒப்படைக்கிறார். இந்நடைமுறையில் துறை அலுவலர் தன்னிச்சையாக தவறிழைக்க வாய்ப்பில்லாததால் விடைத்தாள் திருத்தும் பணியில் பணி மூப்பினடிப்படையில் CE, So வழங்குவதுபோல் தேர்வுப்பணியிலும் துறை அலுவலர் பணி ஒதுக்கி உதவிபெறும் பள்ளி ஆசியர்களுக்கு சம அந்தஸ்து மற்றும் உரிமை வழங்குமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை TNPGTA கேட்டுக்கொள்கிறது.

ஆணையருக்கு

அமைச்சரிடம் வைத்த கோரிக்கைகள்+

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சேமநல நிதி முன்பணம், பகுதி இறுதி தொகை பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதத்தை தவிர்க்க முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு உயர்திரு ஆணையர் அவர்களை TNPGTA கேட்டுக்கொள்கிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கியதைப் போல் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணிணி வழங்கி ஏழை மாணவர்களுக்கு கற்றுவிக்கும் முறையை மேம்படுத்த உதவிடும்வகையில் அரசுக்கு பரிந்துரைக்குமாறு

உயர்திரு ஆணையர் அவர்களை TNPGTA கேட்டுக்கொள்கிறது

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES