Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 December 2021

விரிவுரையாளர் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் தினமலர் செய்தி எதிரொலி

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு, திட்டமிட்டபடி நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டும் வெளியானது.'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 1,060 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப டிசம்பர் 8 - 12 வரை தேர்வு நடக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. 

இந்நிலையில், நவம்பர் முழுதும் கன மழை பெய்து, பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே திட்டமிட்டபடி தேர்வு நடக்குமா என தேர்வர்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், டி.ஆர்.பி., தலைவர் லதா வெளியிட்ட அறிவிப்பு:திட்டமிட்டபடி வரும் 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை தேர்வு நடத்தப்படும். முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் தேர்வு நடத்தப்படும். முன்னுரிமை அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

தேர்வு மையம் மாறுதல் தொடர்பாக மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணியர் ஆகியோர், trblse@onlineregistrationform.org என்ற 'இ- - மெயில்' முகவரிக்கு, நாளைக்குள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டும். டி.ஆர்.பி., இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES