Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 December 2021

கிரிப்டோகரன்சியை தடை செய்யாதீங்க.. அரசுக்கு வலியுறுத்தல்!

கிரிப்டோகரன்சிகளை தடை செய்வது விவேகமற்ற செயல் என அரசுக்கு எச்சரிக்கை.

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை தடை செய்வது விவேகமற்றது என அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை மையம் வலியுறுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சியில் 15 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் முதலீடு செய்தும், வர்த்தகம் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் அரசு கிரிப்டோகரன்சிகள் மீது கவனம் செலுத்தி அவற்றை குறிப்பிட்ட விதிமுறைகளின்படி சட்டபூர்வமாக்க வேண்டும், அதை விடுத்து கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய அரசு முடிவு செய்தால் அது அரசின் ”விவேகமற்ற” செயலைக் குறிக்கும் எனவும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரிப்டோகரன்சியானது அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு எதிர்கால வர்த்தக தொழில்நுட்பமாக இருக்கிறது.இந்தியர்கள் மட்டுமே சுமார் 660 கோடி வரை கிரிப்டோ – சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர் என்றும் ORF அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியாவில் இரண்டு கிரிப்டோ யூனிகார்ன்கள் மற்றும் 350க்கும் மேற்பட்ட கிரிப்டோ ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இப்புள்ளி விவரங்களிலிருந்தே கிரிப்டோகரன்சி வர்த்தகமானது ஒரு வளர்ந்து வரும் தொழிலாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும், வளர்ந்து வரும் கிரிப்டோ சந்தையை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ORF கூறுகிறது.

தனியார் கிரிப்டோகரன்சிகளை அரசு தடை செய்யும் பட்சத்தில் அது நாட்டின் குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பை ஏற்படுத்தும், மேலும் புதிய தொழில்கள் சட்டவிரோதமாக செயல்படுவதை ஊக்குவிக்கும் எனவும் ORF அரசை எச்சரித்துள்ளது.

தற்சமயம், மத்திய அரசு கிரிப்டோகரன்சி குறித்த புதிய மசோதா விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனக் கூறியுள்ளது கிரிப்டோ வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES