Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 November 2021

பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தொடர்பான அட்டவணை






வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
விரிவான போட்டித் தேர்வு அட்டவணையை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னதாக ஹால் டிக்கெட்கள் வெளியிடப்படும்

தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த 2017-18ஆம் ஆண்டில் காலியான விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக ஏராளமானோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்தனர். இதையடுத்து தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் நீதிமன்ற உத்தரவு மற்றும் கொரோனா பரவல் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதும் குறைந்துள்ளது. தினசரி தொற்று ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். அதாவது, டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கணினி வழியாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

* டிசம்பர் 8 - (காலை) இயற்பியல், பிரிண்டிங் டெக், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்

(மதியம்) ஆங்கிலம், உற்பத்தி பொறியியல், ஐசிஇ, மார்டன் ஆபிஸ் பிராக்டீஸ்

* டிசம்பர் 9 - (காலை) மெக். இன்ஜினீரிங் - 1
(மதியம்) மெக். இன்ஜினீரிங் - 2

* டிசம்பர் 10 - (காலை) வேதியியல்
(மாலை) கணினி அறிவியல் பொறியியல்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES