Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 November 2021

வாட்ஸ்அப் விரைவில் வெளியிட உள்ள 5 புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் வெப்-ற்கான கஸ்டம் ஸ்டிக்கர் உருவாக்கும் டூலை கொண்டு வந்துள்ளது. இதுவிரைவில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ஆப்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்ஸ்டன்ட் மெசேஜிங் உலகில் மிக பிரபலமான App-ஆக இருக்கும் வாட்ஸ்அப்பை, நாள்தோறும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே யூஸர்கள் மேம்பட்ட அனுபவத்தை பெற பல புதிய அம்சங்களையும், அப்டேட்ஸ்களையும் whatsApp அவ்வப்போது வழங்கி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது யூசபிலிட்டி, பிரைவஸி மற்றும் பிற விஷயங்களுக்கான புதிய அம்சங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

நிறுவனம் சமீபத்தில் வாட்ஸ்அப் வெப்-ற்கான கஸ்டம் ஸ்டிக்கர் உருவாக்கும் டூலை கொண்டு வந்துள்ளது. இது விரைவில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ஆப்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே WhatsApp-ல் விரைவில் வரவிருக்கும் சில முக்கிய அம்சங்களை பற்றியும் கீழே பார்க்கலாம்.

தற்செயலாக அல்லது தெரியாமல் தனிப்பட்ட நபர் அல்லது குரூப்பிற்கு அனுப்பப்பட்ட மெசேஜை யூஸர்கள் டெலிட் செய்து கொள்வதற்கான டைம் லிமிட் தற்போது 1 மணிநேரம், 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளாக உள்ள நிலையில், மிக சமீபத்தில் யூஸர்கள் தங்கள் மெசேஜ்களை டெலிட் செய்து கொள்வதற்கான டைம் லிமிட்டை அதிகரிக்க உள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்தது. இப்போது நிறுவனம் 7 நாட்கள் மற்றும் 8 நிமிடங்கள் என்ற டைம் லிமிட்டை டெஸ்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.

ப்ளேபேக் கன்ட்ரோல்ஸ்..


ஆடியோ மெசேஜஸ் அல்லது வாய்ஸ் நோட்ஸ்களின் ப்ளேபேக் ஸ்பீடை மேலும் அட்ஜஸ்ட் செய்ய யூஸர்களை WhatsApp விரைவில் அனுமதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஃபார்வர்டு வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்பீடிங் அப் செய்வதற்கான சாத்தியக்கூறுகளில் WhatsApp செயல்படுகிறது. தற்போது யூஸர்கள் 2X ஸ்பீடை அதிகரிப்பதன் மூலம் நேரடி வாய்ஸ் மெசஜ்களை ஸ்பீடாக கேட்டு வரும் நிலையில், சமீபத்திய அப்டேட்களின் படி ஃபார்வர்டு செய்யப்பட்ட வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்பீட்அப் செய்யும் வசதியையும் யூஸர்கள் பெறுவார்கள்.

லாஸ்ட் சீன், ப்ரொஃபைல் ஃபோட்டோவிற்கான ப்ரைவஸி செட்டிங்ஸ்..

யூஸர்கள் தங்கள் கடைசியாக வாட்ஸ்அப் வந்தது, ப்ரொஃபைல் ஃபோட்டோ மற்றும் ஸ்டேட்டஸை குறிப்பிட்ட தொடர்புகளிலிருந்து மறைக்க அனுமதிக்கும் அம்சத்தையும் whatsapp டெஸ்ட் செய்கிறது. WhatsApp தற்போது யூஸர்களுக்கு 3 ஆப்ஷன்களை வழங்குகிறது. அவர்களின்ப்ரொஃபைல் ஃபோட்டோ மற்றும் லாஸ்ட் சீன் ஆகியவற்றுக்கு "Everyone," "Nobody" மற்றும் "My Contacts." உள்ளிட்ட ப்ரைவஸி செட்டிங்ஸை அளிக்கிறது. விரைவில் இதோடு சேர்த்து “My Contacts…Except"என்ற ஆப்ஷனை விரைவில் சேர்க்க உள்ளது WhatsApp.

ஃபோட்டோ எடிட்டர்..


இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஃபோட்டோ எடிட்டரை வாட்ஸ்அப் வெப்பில் கொண்டு வரும் வேலையில் இருப்பதாக நிறுவனம் கூறியது. இதன் மூலம் யூஸர்கள் எந்த வாட்ஸ்அப் ஸ்கிரீனில் இருந்தும் ஸ்டிக்கர்கள் மற்றும் டெக்ஸ்ட்களை சேர்க்கலாம் அல்லது தங்கள் ஃபோட்டோக்களை க்ராப் மற்றும் ரொட்டேட் செய்யலாம்.

மொபைல் ஆப்-பிற்கான ஸ்டிக்கர் மேக்கர்..


தற்போது யூஸர்கள் ப்ரீ லோடட் அல்லது தேர்ட் பார்ட்டி ஸ்டிக்கர் பேக்ஸ்களை பயன்படுத்தி ஸ்டிக்கர்களை அனுப்ப மட்டுமே வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. எனினும் விரைவில் iOS மற்றும் Android யூஸர்கள் தங்கள் சொந்த ஸ்டிக்கர்களை விரைவில் உருவாக்க நிறுவனம் அனுமதிக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.

முதல் லைவ்ஸ்ட்ரீம் ஷோ ஜேசன் டெருலோவால் "30 நிமிட வெரைட்டி ஷோவாக " நடத்தப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.


மைக்ரோ-பிளாக்கிங் தளமான Twitter விரைவில் ஷாப்பிங் மற்றும் லைவ்ஸ்ட்ரீமை இணைத்து ஹோஸ்ட் செய்யும் சமூக ஊடக தளமாக மாறப்போகிறது. மேலும், நிறுவனம் தனது முதல் ஷாப்பிங் லைவ்ஸ்ட்ரீமை நவம்பர் 28ம் தேதி அன்று 7PM ET (5:30AM IST) மணிக்கு நடத்த இருப்பதாவும் தெரிவித்துள்ளது. இந்த ஷாப்பிங் அம்சத்தை வால்மார்ட்டுடன் இணைந்து Twitter நடத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேல் "சைபர் டீல்ஸ் சண்டே" என்ற பெயரில் தேங்க்ஸ் கிவ்விங் வாரத்தின் இறுதியில் நடைபெறும். இது பல நாடுகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் சேல் ஆகும். இந்த நாளின் போது எல்லா இடங்களிலும் பெரிய சலுகைகள் வழங்கப்படும்.

இந்த முதல் லைவ்ஸ்ட்ரீம் ஷோ ஜேசன் டெருலோவால் "30 நிமிட வெரைட்டி ஷோவாக " நடத்தப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. அதில் "எலக்ட்ரானிக்ஸ், வீட்டுப் பொருட்கள், ஆடைகள், பருவகால அலங்காரங்கள், சிறப்பு விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துதல் மற்றும் பல" இடம்பெறும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷாப்பிங் மற்றும் லைவ்ஸ்ட்ரீம் டிரெண்டிங்கில் ட்விட்டர் முதல்முறையாக நுழைந்திருக்கிறது. இதற்கு முன், மெட்டா ஃபேஸ்புக்கிற்கான "லைவ் ஷாப்பிங் ஃபார் கிரியேட்டர்ஸ்" அம்சம் தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்


அதேபோல Pinterest ஆனது "Pinterest TV" என்ற நேரடி ஷாப்பிங் ஃபீச்சரை அறிமுகப்படுத்தியது. மேலும் YouTube அதன் நேரடி-ஷாப்பிங் அம்சத்தை YouTube ஹாலிடே ஸ்ட்ரீம் மற்றும் ஷாப் எனப்படும் ஒரு வார கால ஷாப்பிங் நிகழ்வுடன் விரிவுபடுத்தியது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது லைவ்ஸ்ட்ரீம் ஷாப்பிங் முன்னெடுத்து வருவது புதிய ட்ரெண்டாகவே மாறியுள்ளது. முக்கியமாக இந்த லைவ் ஸ்ட்ரீம் ஷாப்பிங் சீனாவில் ஒரு குறிப்பிட்ட அளவு வரவேற்பை பெற்றுள்ளது.

அங்குள்ள Gen Z வாடிக்கையாளர்கள் பாரம்பரிய ஈ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து சமூக ஊடகங்கள் வழியாக கொள்முதல் செய்வதை நோக்கி அதிகளவில் மாறி வருகின்றனர். நிறுவனம் பகிர்ந்துள்ள படங்களின்படி ட்விட்டரின் லைவ் ஷாப்பிங் இன்டெர்பேசானது, வீடியோ லைவ்ஸ்ட்ரீம், ஆன்லைன் கேட்லாக் மற்றும் ட்வீட்களின் நியூஸ் பீட் போன்றவற்றை தனித்தனியாக பிரித்துக் காண்பிக்கிறது. நீங்கள் விற்பனையாளரின் இணையதளத்திற்கான லிங்கை பின்தொடர்ந்தால், ஸ்ட்ரீமானது பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறையில் தொடர்ந்து இயங்கும்.

மேலம் இந்த ஷாப்பிங் எலிமெண்ட்டுகள் ஆரம்பத்தில் iOS மற்றும் டெஸ்க்டாப்பில் மட்டுமே வரும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. மறுபுறம், ஆண்ட்ராய்டு யூசர்கள் ஸ்ட்ரீமை நேரலையில் பார்க்க முடியும். ஆனால் ஷாப்பிங் அம்சங்களுடன் ஈடுபட முடியாது. நவம்பரில் வெளியிடப்படும் ட்விட்டர்-வால்மார்ட் ஸ்ட்ரீம் ஒரு "சோதனை" தான் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி வெர்ஜினில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, தற்போது பிராண்டுகளுக்கு மட்டுமே ஷாப்பிங் லைவ்ஸ்ட்ரீம்களை ஹோஸ்ட் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் வழக்கமான ட்விட்டர் யூசர்களுக்கு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES