Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 July 2021

எம்.பில். படிப்புக்கு கட்டணமில்லை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.



சென்னை: ‛‛மாணவ, மாணவியர் இலவசமாக தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.பில். படிக்க விண்ணப்பிக்கலாம்,'' என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2021- 22ம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டுத் தெரிவுப் பட்டியல் அமைக்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஜெராக்ஸ் நகல்கள் (இரண்டு வீதம்) எடுத்துவரவேண்டும்.

அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பங்களை நிறுவன வலைதளம்மான
www.ulakaththamizh.in
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்- 16.08.2021.

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும்.

கல்விக் கட்டணம் - கிடையாது. மாணவ, மாணவியர்க்குத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி, சென்னை - 113,

போன்: 044-2254 2992.

சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்களை
www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES