Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 February 2021

தேர்வு நேரத்தில் பிள்ளைகளின் கவனத்தை ஒருங்கினைக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன

மாணவர்களை தேர்வு சமயத்தில் தயார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்


தற்போது பிள்ளைகளிடையே தேர்வு பயம் நெருங்கிவிட்டது. பள்ளிகளும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி கண்டிப்புடன் பாடங்களை நடத்தி வகுப்புத் தேர்வுகளை வைக்கின்றனர். மாணவர்களும் வரவிருக்கும் ஆண்டுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையும் வெளியாகிவிட்டது.

இதனால் மிகவும் பதட்டத்துடனும் , பயத்துடனும் இருக்கக் கூடும். ஆனால் அவற்றையெல்லாம் சமாளித்து பிள்ளைகளை அமைதி நிலைக்கு கொண்டு வரவும், கவனத்தை ஒருங்கினைக்கவும் பெற்றோர்களுக்கான யோசனைகள் இதோ...

யோகா மற்றும் தியானம் : தியானம் செய்வது மனதை ஒருநிலைப்படுத்தவும், கவனச்சிதறல்களை சரிசெய்யவும் உதவும். அதோடு பதட்டத்தோடு இருக்கும் மனநிலையை அமைதியாக்கும். எனவே அமைதியான சூழலில் உங்கள் பிள்ளைகளை தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்யச் சொல்லுங்கள். அதேபோல் யோகா பயிற்சிகளும் மனதிற்கு ரிலாக்ஸாக இருக்கும். மனம்நலமும் ஆரோக்கியம் பெறும்.

டிஜிட்டல் டீடாக்ஸ் : உங்கள் பிள்ளைகளுக்கு லாக்டவுன் சமயத்தில் செல்ஃபோன் மற்றும் கேஜெட்டுகளில் அதிக நேரம் செலவழித்திருக்கக் கூடும். எனவே அவர்களின் திரை நேரத்தைக் குறையுங்கள். இதை செய்தாலே பிள்ளைகளின் கவனத்தை ஒருங்கிணைக்க ஈசிதான்.

படிக்கும் இடம் : சிலருக்கு வீட்டின் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து படித்தால்தான் படிப்பு மண்டைக்கு ஏறும் என்பார்கள். படிக்கும் அனைத்தும் எளிதில் மனப்பாடமாகிவிடும். அதை லக்கி கார்னர் என்றும் அழைப்பார்கள். அப்படி உங்களுக்கான இடத்தைக் கண்டறிந்து அமர்ந்து படிப்பதால் கவனத்தை ஒருங்கினைக்கலாம்.

பழகிக்கொள்ளுங்கள் : படிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் என உங்களுக்கு நீங்களே ஒரு அட்டைவணையை தயார் படுத்திக்கொள்ளுங்கள். அந்த அட்டவணைப்படி சில நாட்கள் பின்பற்றி வாருங்கள். பின் அது உங்களுக்கு தினசரி பழக்கமாக மாறிவிடும். இதை முயற்சி செய்து பாருங்கள்.

இலக்கு : ஏனோ தானோவென படிக்காமல் ஒரு இலக்கை வகுத்துக்கொண்டு அதை நோக்கி ஓடினால் உங்கள் கவனம் சிதறாமல் அந்த இலக்கில் மட்டும் கவனம் ஒருங்கினைக்கப்படும். எனவே உங்களுக்கான இலக்கை வகுத்துக்கொள்ளுங்கள்.

இடைவெளி : உங்களுக்கான இடைவெளியை ஏற்படுத்திக்கொள்வதும் அவசியம். தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது மனஅழுத்தத்தை உண்டாக்கும்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES