Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 October 2020

புதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு

புதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு
.
புதிய கல்விக் கொள்கைப்படி தயாரிக்கப்பட்ட, 18 ஆன்லைன் படிப்புகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது.

மத்திய அரசு சார்பில், புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துஉள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய அரசு தயாரித்துள்ள, 18 வகை ஆன்லைன் படிப்புகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டும் என, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பள்ளி கல்வியின், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் வழியே, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், 18 வகை படிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.அவற்றை ஒன்று முதல் எட்டு வரையில் பாடம் எடுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மூன்று மாதங்களுக்குள் ஆன்லைனில் படிக்க வேண்டும். அதன்பின், இதற்கு ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்து சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நிஷ்தாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 3 course வீதம் ஜனவரி 15 முடிய மொத்தம் 18 course ஒவ்வொரு ஆசிரியரும் online மூலம் படித்து முடிக்க வேண்டும்

இதற்கு DIKSHA APP DOWNLOA D செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட 

கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து

Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலித்து தேர்ச்சி பெறவேண்டும் நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள்.

October 16-30

Course 1- கலைத்திட்டம் மற்றும் உள்ளடங்கிய கல்வி

Course 2 - தனியாள் - சமூகத்திற்கு உரிய பண்புகளை வளர்த்தலும்

பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளிச் சூழலை உருவாக்குதலும் 

Course 3 - பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரமும் நலவாழ்வும்

நவம்பர் 1-15

Course 4 கற்றல்-கற்பித்தல் செயலில் பாலின பன்முகத்

தன்மையின் பொருத்தப்பாடு

Course 5 - கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு

Course 6 - கலையோடு இணைந்த கற்றல்

நவம்பர் 16-30

Course 7- பள்ளி சார்ந்த மதிப்பீடு

Course 8- சூழ்நிலையியல் கற்பிக்கும் முறை

Course 9-கணிதம் கற்பிக்கும் முறை

டிசம்பர் 1-15

Course 10 - சமூக அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க
நிலை)

Course 11- மொழி கற்பிக்கும் முறை

Course 12 - அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை)

டிசம்பர் 16-31

Course 13 பள்ளி தலைமைப் பண்பிற்கான கருத்துக்களும் அவற்றின் பயன்பாடுகளும்

Course 14 - பள்ளிக் கல்வியில் புது முயற்சிகள்

Course 15 - பள்ளி முன்பருவக் கல்வி

2021 ஜனவரி 1-15 

Course 16 - முன்பருவ தொழிற்கல்வி

Course 17 - கோவிட் -19 (Covid-19) நிகழ்நிலவரம்: பள்ளிக் கல்வியில் சவால்களை எதிர்கொள்ளல்

Course 18 - உரிமைகளைப் புரிந்துகொள்ளல், குழந்தை பாலியல்

வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப்பாதுகாத்தல் சட்டம் (POCSO Act), 2012

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES