Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 April 2023

கடகம் குரு பெயர்ச்சிப் பலன்கள் 2023


கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

தளராத மனமும் தயாள குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான மீனத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த குருபகவான் தற்போது 10 ம் வீடான மேஷத்தில் 22.04.2023 முதல் 01.05.2024 வரை அமர்ந்திருந்து பலன் தர இருக்கிறார். பத்தில் குரு அமர்ந்தால் ஆபத்தே... பதவிக்குச் சிக்கல் வருமே என்று கலங்க வேண்டாம்.

குருவின் சஞ்சார வீடு சாதகமில்லாத நிலையிலும் குருவின் பார்வை தரும் பலன்களால் துன்பங்களிலிருந்து எளிதில் மீள்வீர்கள். உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய வீடுகளை குருபகவான் பார்ப்பதால் யாராலும் முடிக்கமுடியாத விஷயங்களைக் கூட உங்கள் சாமர்த்தியத்தால் பேசியே முடித்துவிடுவீர்கள். அந்த அளவிற்கு வாக்குஸ்தானம் வலுப்பெறப் போகிறது. பணம் வரவில் இருந்த சிக்கல்கள் நீங்கி தேவையான பொருள்வரவு உண்டாகும். பழைய சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடன்கள் அடைபட வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். சர்க்கரை, கொழுப்பு அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். லாகிரி வஸ்துக்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

உத்தியோக ஸ்தானமான 10 - ம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகரித்தவண்ணம் இருக்கும். பணியிடத்தில் தேவையற்ற வீண்பழி, மன உளைச்சல் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் இல்லையே என்று வருத்தப்படுவீர்கள். என்றாலும் மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

பிள்ளைகளின் உயர்கல்வி - திருமண முயற்சிகளில் இழுபறி நிலை காணப்படும் என்றாலும் முயன்று முடித்துவிடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் அவ்வப்போது தொந்தரவு தருவார்கள். யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். அக்கம் பக்கத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.04.2023 முதல் 23.06.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 06.02.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் வரவுக்கு மீறி செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். வேலைகளில் இருந்த இழுபறி நிலை மாறி சாதகமாகும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டு.

23.06.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 06.02.2024 முதல் 17.04.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மூத்த சகோதரர்கள் பலவகையிலும் உதவுவார்கள். திடீர் பணவரவு உண்டு. என்றாலும் வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து விலக்குவீர்கள்.

17.04.2024 முதல் 01.05.2024 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். இழந்தப் பதவியை மீண்டும் பெறுவீர்கள். போட்டியில் வெற்றி உண்டு.

குருபகவானின் வக்ர சஞ்சாரம் - 11.09.2023 முதல் 20.12.2023 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகும். வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீட்டிலும் சின்னச் சின்ன ரிப்பேர் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.

வியாபாரிகள் :

 போட்டிகள் கடுமையாக இருந்தாலும் அவற்றை சமாளிப்பீர்கள். விளம்பரம் மூலம் தொழிலை விருத்தி செய்வீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. பழைய பாக்கிகளை சாமர்த்தியமாக வசூலிக்கப்பாருங்கள். பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கெடுபிடிகாட்ட வேண்டாம். கமிஷன், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன், செப்டம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் :

 பதவி உயரும் காலம் இது. இருந்தாலும் பணியிடங்களில் சின்னச் சின்ன அவமானங்களையும் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அலுவலக ரகசியங்களை வெளியே பகிர்ந்துகொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் கண்டிப்பு காட்டுவார்கள். அடிக்கடி விடுமுறை எடுப்பதைத் தவிருங்கள். புதுவாய்ப்புகள் வந்தால் நன்கு ஆலோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி மாதங்களில் உயர்வு உண்டு. வெளிநாட்டுத்தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கொஞ்சம் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாலும் பல விஷயங்களில் சாதிக்கவும் வைக்கும்.


sourcs
www.vikatan.com

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES