Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

06 April 2022

புதிய கல்வி கொள்கை; குழு அமைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு



புதிய மாநில கல்விக் கொள்கை வடிவமைக்க குழு அமைப்பு

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவில் 13 பேர் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வகுத்து தந்த சமூக நீதிப் பாதையில் முனைப்போடு செயல்பட்டு வரும் இந்த அரசு, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அனைத்து தொழில் கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருகிறது.

சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கி சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதால், அதன் வளர்ச்சிக்காக, குறிப்பாக மாணவ- மாணவியருக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் செய்வதிலும், இளைய சக்திகள் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதை உயரிய இலக்காக கொண்டு கலைஞர் காட்டிய வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு அறிவியல் புதுமைகளை புகுத்தவும், புதிய சிந்தனைகளை விதைக்க வேண்டியது அவசியம்.

இருப்பினும் இன்றைய அறிவியல் ஒவ்வொரு நொடியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே மாணவர்கள் அறிவியலை தெரிந்து கொள்ளவும், கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணத் திட்டங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் என்பதால், 2021-2022ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய சான்றோர்கள், அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த குழுவினர் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓராண்டுக்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்.

வல்லுனர் குழுவில் யார் யார்?

குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் உறுப்பினர்களாக, சவீதா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜவகர்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவன கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், ராம.சீனுவாசன், யூனிசெப் நிறுவன முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் முனைவர் அருணாரத்னம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம், கிச்சான் குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES