Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 March 2022

அனைவரிடமும் இருக்க வேண்டும்: அரசு டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்ட் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?.,அதிகப்பலன்





ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABHA)-வின் ஒரு பகுதியாக டிஜிட்டல் ஹெல்த் கார்டு 2022 முயற்சியை இந்திய அரசு தொடங்கி இருக்கிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஹெல்த் கார்ட் ஆகும். காரணம் இந்த கார்ட் குடிமக்களின் மருத்துவ வரலாற்றைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. டிஜிட்டல் ஹெல்த் கார்டுக்கு படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். டிஜிட்டல் ஹெல்த் கார்டு 2022 விண்ணப்பிக்க healthid.ndhm.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம். அதன்பின் ABHA டிஜிட்டல் ஹெல்த் கார்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். டிஜிட்டல் ஹெல்த் கார்ட் பதிவிறக்கம் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

டிஜிட்டல் ஹெல்த் கார்டு 2022 மூலம் இந்திய அரசு மருத்துப் பதிவுகளை டிஜிட்டல் மையமாக்கத் தொடங்கி இருக்கிறது. ஹெல்த் ஐடி போர்ட்டலான healthid.ndhm.gov.in என்ற இணையதளத்தில் இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மோடி ஹெல்த் கார்டு, டிஜிட்டல் ஹெல்த் கார்டு எனப்படும் டிஜிட்டல் கார்டில் மக்கள் தங்கள் மருத்துவப் பதிவுகள் அனைத்தையும் ஆன்லைனில் சேமிக்க இந்த அம்சம் அனுமதிக்கிறது. ஒரு நபரின் உடல்நல ஆரோக்கியம் குறித்த தகவல் அவருக்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மருத்துவப் பதிவை அவர்களே கையாண்டுக் கொள்ளலாம். மக்கள் தங்கள் ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும், அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும் என்பது கட்டாயம்.


1: healthid.ndhm.gov.in என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்.

2: அடுத்ததாக அதன் கீழ் காணப்படும் மெனுவில் (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) டிஜிட்டல் ஹெல்த் கார்டு அல்லது ABHA கணக்கை உருவாக்கு என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

3: டிஜிட்டல் ஹெல்த் கார்டுக்கு பதிவு செய்ய ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

4: அதன்பின், பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓடிபி உள்ளிட்ட தகவலை உள்ளிட வேண்டும்


5: 14 இலக்க டிஜிட்டல் ஹெல்த் கார்டுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்ப வேண்டும்.


1. Healthid.ndhm.gov.in

2. Visit Ayushman Bharat Digital Mission Portal

3. Download National Digital Health ID Card 2022

4. Digital Health Card Apply Online 2022


டிஜிட்டல் ஹெல்த் கார்டு பதிவு 2022-ஐ பூர்த்தி செய்ய இந்த ஆவணங்கள் தேவைப்படலாம்.

1: ஆதார் அட்டை, மொபைல் எண், பிறப்புச் சான்றிதழ் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தேவை.

2: 2022 டிஜிட்டல் ஹெல்த் கார்ட் பதிவு செய்வதற்கு பான் அட்டையையும் பயன்படுத்தலாம்.

3: 2022 டிஜிட்டல் ஹெல்த் கார்ட் பதிவு செய்ய ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்தையும் பயன்படுத்தலாம்.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் கார்ட் மூலம் உங்கள் அனைத்து நோயறிதல்கள் அறிக்கைளை ஒரே டாஷ்போர்டில் சேமித்து வைக்கலாம். உங்கள் 14 இலக்க ஹெல்த் ஐடி மூலம் எங்கிருந்தாலும் உங்கள் மருத்துவ அறிக்கையை கண்டறியலாம். மருத்துவத் தகவலை கண்காணிக்க உங்கள் ஓடிபி தேவை என கூறப்படுகிறது. இந்த கார்ட் மூலம் தங்கள் பிரச்சனை குறித்து மருத்துவர் உடனடியாகவும் முழுமையாகவும் கண்டறிந்து சிறந்த ஆலோசனைகளை பெற முடியும்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES