Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

06 March 2022

மனமொத்த மாறுதல் கலந்தாய்வு -உடனடியாக நடத்த வேண்டுதல் சார்பு

அனுப்புனர்
ஆ.இராமு,
மாநில தலைவர்
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
DRPGTA
7373761517

பெறுநர்
மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள், பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை-6.

ஐயா,
பொருள்:- ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் மனமொத்த மாறுதலையும் உடனடியாக நடத்த வேண்டுதல் சார்பு,

வணக்கம்.
நேற்று 04.03.22 வெள்ளிக் கிழமை முதுகலை ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மிகவும் சிறப்பாக 100% வெளிப்படையாகவும் நடைபெற்றது.
  05.03.22 சனிக்கிழமை முதுகலை ஆசிரியர்களுக்கான வெளி மாவட்டத்திற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தொடர்ச்சியாக முதுகலை ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நடத்தவும் உடனடியாக உரிய அறிவிப்புகளை தாங்கள் வெளியிட வேண்டும் என்று தாங்களைப் பணிவோடும் கனிவோடும் கேட்டுககொள்கிறேன்.

மேலும் உள் மாவட்ட ,-வெளிமாவட்ட மற்றும் மனமொத்த மாறுதல் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் புதிய பள்ளியில் பணியில் சேரும் தேதியின் அடிப்படையில் பணி மூப்பு மாறுபடாமல் இருக்க உரிய அறிவிப்புகளையும் வெளியிட வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
நன்றி வணக்கம்

இப்படிக்கு..
ஆ.இராமு
மாநிலத் தலைவர்
DRPGTA

நாமக்கல்
05.03.22.

நகல்

மதிப்பிற்குரிய
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்கள் (மேல்நிலை கல்வி) உயர்திரு எம். ராமசாமி ஐயா அவர்கள்..
பள்ளிக்கல்வி ஆணையரகம் சென்னை-6


CLICK HERE



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES