Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 March 2022

ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ஒரு ராசிகட்டத்தில்‌ அதிக நாட்கள்‌ இருக்கும்‌ சனி, ராகு-கேது, குரு ஆகியவற்றின்‌ பெயர்ச்சிகள்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரியன்‌-சந்திரன்‌ சுற்றுப்‌ பாதையில்‌ அவை சந்திக்கும்‌ இரு புள்ளிகளைத்தான்‌ ராகு-கேது என்கிறோம்‌. இங்கு கோச்சார படி, ஜோதிடர் - காழியூர் நாராயணன் மிதுன ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் விளக்கியுள்ளார்.

மிதுன ராசி அன்பர்களே 

இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும்‌. கேது தற்போது 6-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ உள்ளார்‌. இது மிகச்சிறப்பான இடம்‌. அவரால்‌ பொன்னும்‌, பொருளும்‌ தாராளமாக கிடைக்கும்‌. புதிய வீடு மனை வாங்கும்‌ யோகம்‌ உண்டு.மேலும்‌ அவரது பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால்‌ பக்தி உயர்வு மேம்படும்‌. எடுத்த பொருளாதார வளம்‌ மேம்படும்‌.காரிய அனுகூலம்‌ ஏற்படும்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 5-ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு வருகிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. இந்த இடத்தில்‌ அவர்‌ அரசு வகையில்‌ சிற்சில பிரச்சினையை தரலாம்‌. மேலும்‌ திருட்டு பயமும்‌ ஏற்படலாம்‌. ஆனால்‌ கேதுவின்‌ பின்னோக்கிய 7-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு11-இடமான மேஷத்தில்‌ விழுகிறது. இதன்‌ மூலம்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்‌.

ராகு தற்போது உங்கள்‌ ராசிக்கு 12-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருக்கிறார்‌. இது சுமாரான நிலைதான்‌. இங்கு அவரால்‌ நற்பலனை தரஇயலாது. பொருள்‌ விரயத்தையும்‌, தூரதேச பயணத்தையும்‌ கொடுப்பார்‌.ஆனால்‌ அவரது பின்னோக்கிய 7-ம்‌ இடத்துப்‌-பார்வை உங்கள்ராசி க்கு 6-இடமான விருச்சிகத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்‌ மூலம்‌ உங்கள்‌ ஆற்றல்‌ மேம்படும்‌. முயற்சிகளில்‌ வெற்றியை தருவார்‌. பகைவர்களின்‌ சதியை முறியடிக்கும்‌ வல்லமையை பெறுவீர்கள்‌. மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று அவர்‌ இடம்‌ மாறி 11-ம்‌ இடமான மேஷத்திற்கு செல்கிறார்‌. அவரால்‌ பொன்‌,பொருள்‌ கிடைக்கும்‌. மகிழ்ச்சியும்‌, ஆனந்தமும்‌ அதிகரிக்கும்‌. பெண்கள்‌ மிக உறுதுணையாக இருப்பர்‌
.

இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில்‌ குருபகவான்‌ உங்கள்‌ ராசிக்கு 9-ம்‌ இடத்தில்‌ இருகிறார்‌. இது மிகச்சிறப்பான இடம்‌. மனமகிழ்ச்சி இருக்கும்‌. உற்சாகம்‌ பிறக்கும்‌. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தி ஆகும்‌. தடைபட்டு வந்த திருமணம்‌ நடக்க வாய்ப்பு உண்டு.தம்பதியினர்‌ இடையே ஒற்றுமை மேம்படும்‌. உறவினர்கள்‌ உதவி -கரமாக இருப்பர்‌. உங்களை புரிந்துகொள்ளாமல்‌ இருந்தவர்கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌. இவை அனைத்தும்‌ குருவால்‌ கிடைக்கும்‌ நற்பலன்கள்‌. இது தவிர குருவின்‌ 9-ம்‌

இடத்துப்‌ பார்வையும்‌ சிறப்பாக இருக்கிறது. இதன்‌ மூலமும்‌ நற்பலன்கள்‌ கிடைக்கும்‌. ஆனால்‌ குருபகவான்‌ ஏப்ரல்‌14-ந்‌ தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 10-ம்‌ இடமான மீன ராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌இல்லை. அப்போது குரு பொருள்‌ நஷ்டத்தையும்‌மனசஞ்சலத்தையும்‌ ஏற்படுத்துவார்‌. குரு சாதகமற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ அவரது 5-ம்‌ இடத்துப்‌ பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன்‌ மூலம்‌ எந்த இடையூறையும்‌ உடைத்தெறிந்து முன்னேற்றம்‌ காணலாம்‌. குரு ஜுன்‌ 20-ந்‌ தேதி முதல்‌ நவம்பர்‌ 16-ந்‌தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. அவர்‌ வகிக்ரம்‌ அடைந்தாலும்‌ மீன ராசியிலேதான்‌ இருக்கிறார்‌.

எந்த கிரகமும்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ போது அவரால்‌ சிறப்பாக செயல்பட முடியாது. சனிபகவான்‌ தற்போது 8-ம்‌ இடமான மகர ராசியில்‌ உள்ளார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. அஷ்டமத்தில்‌ சனியால்‌ எப்படி நன்மை தர முடியும்‌? இங்கு அவர்‌ உங்கள்‌ முயற்சிகளில்‌ பல்வேறு தடைகளை உருவாக்குவார்‌.அக்கம்‌ பக்கத்தினர்கள்‌ வகையில்‌ மனக்கசப்பும்‌, கருத்துவேறுபாடும்‌ ஏற்படும்‌ சிலர்‌ ஊர்விட்டு ஊர்செல்லும்‌ நிலை உருவாகும்‌.--இவையெல்லாம்‌ அஷ்டமத்து சனியின்‌ பொதுவான பலன்தான்‌. ஆனால்‌ இந்த கெடு பலன்கள்‌ அப்படியே நடக்குமோ என்று கவலை கொள்ள வேண்டாம்‌. காரணம்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை சனிபகவான்‌ வகிக்ரத்தில்‌ உள்ளார்‌. இந்த காலக்கட்டத்தில்‌ சனியின்‌ பலம்‌ சற்று குறையும்‌. அவரால்‌ கெடுபலன்‌ -கள்‌ நடக்காது. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு சனி பகவானின்‌ அனைத்து பார்வைகளும்‌ சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ பொருளாதார வளம்‌ கூடும்‌. நல்ல பணப்புழக்கத்துடன்‌ காணப்படுவர்‌.

இனி விரிவான பலனை தெரிந்துகொள்ளலம்

பெண்களுக்கு சாதகமான திசையில்‌ காற்று வீசுவதால்‌ முக்கிய பொறுப்புகளை அவர்கள்‌ வசம்‌. ஒப்படையுங்கள்‌. அது சிறப்பாக முடியும்‌. ராகு பொருளாதாரத்தில்‌ நல்ல வளத்தைத்‌ தருவார்‌. பெண்களால்‌ அனுகூலம்‌ கிடைக்கும்‌. குடும்பத்தில்‌ வசதிகள்‌ அதிகரிக்கும்‌. ஆடம்பர பொருட்களை வாங்கலாம்‌.

கணவன்‌-மனைவி இடையே அன்பு பெருகும்‌. மேலும்‌ குருவின்‌ பார்வையால்‌ துணிச்சல்‌ பிறக்கும்‌. தேவையான பொருட்களை வாங்கலாம்‌.

உத்தியோகத்தில்‌ 
பெண்கள்‌ வகையில்‌ இருந்த இடர்பாடுகள்‌ மறையும்‌. அதே பெண்கள்‌ உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்‌. மேல்‌ அதிகாரிகளிடம்‌ அனுசரித்து போகவும்‌. வியாபாரம்‌ சிறப்படையும்‌. கடநத கால நஷ்டம்‌ இருக்காது. அதிக வருமானத்தைக காணலாம்‌. மேலும்‌ குருவின்‌ பார்வையால்‌ பண வரவு கூடும்‌. பகைவர்களின்‌ சதி உங்களிடம்‌ எடுபடாது. அவர்கள்‌ சரண்‌ அடையும்‌ நிலை ஏற்படும்‌. இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும்‌, தரகு, பழைய பொருட்களை

வாங்கி விற்பது போன்ற தொழில்களும்‌ சிறந்து விளங்கும்‌. வயதால்‌ மூத்த பெண்கள்‌ உங்களுக்கு தக்க சமயத்தில்‌ உதவுவார்கள்‌. அதன்‌ மூலம்‌. வளர்ச்சியை அடையலாம்‌. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌. கலைஞர்களுக்கு முயற்சிகளில்‌ தடையும்‌, மனதில்‌ சோர்வும்‌ ஏற்படும்‌. பொதுநல சேவகர்களுக்கு புகழ்‌, பாராட்டு வரும்‌. அரசியல்வாதிகள்‌ மேம்பாடு அடைவர்‌. பதவியும்‌, பணமும்‌ கிடைக்கும்‌. மாணவர்கள்‌

சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும்‌. சிலர்‌ கெட்ட சகவாசத்திற்கு வழி வகுக்கலாம்‌. பெற்றோர்கள்‌ மிகவும்‌ கவனமாக இருக்கவும்‌. விவசாயிகள்‌ நல்ல வளத்தைக்‌ காணலாம்‌. பூமியில்‌ விளையும்‌ அனைத்து பொருள்களும்‌ நல்ல மகசூலைத்‌ தரும்‌. உளுந்து, எள்‌, பனைபொருள்‌ மற்றும்‌ மானாவாரி பயிர்களில்‌ சிறப்பான மகசூல்‌ கிடைக்கும்‌. புதிய தொழில்‌ நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர்‌. நவீன இயந்திரங்கள்‌ வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள்‌ சாதகமாக இருக்கும்‌.

பெண்களுக்கு 
குரு மனஉளச்சலையும்‌, உறவினர்‌ வகையில்‌ வீண்‌ பகையையும்‌ உருவாக்கு -வார்‌. இருப்பினும்‌ குருபகவானின்‌ 5-ம்‌ இடத்துப்‌ பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்‌.வேலைக்கு செல்லும்‌ பெண்களுக்கு கோரிக்கைகள்‌ நிறைவேறும்‌. வியாபாரம்‌ செய்யும்‌ பெண்கள்‌ நல்ல வருமானத்தைப்‌ பெறுவர்‌. உடல்நலம்‌ லேசாக பாதிக்கப்படலாம்‌ பிள்ளைகள்‌ நலனில்‌ அக்கறை தேவை.

பரிபாராம்‌.

சனிக்கிழமை தோறும்‌ பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்‌. வியாழகிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலத்து கொள்ளுங்கள்‌. பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம்


sourceNo comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES