Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 March 2022

ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம்‌ ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை தரப்போகிறது, யாரெல்லாம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஜோதிடர் காழியூர் நாராயணன் கணித்து அளித்துள்ளார்.

துலாம்‌ ராசி அன்பர்களே! ராகு: தற்போது 8-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. அவர்‌ உறவினர்கள்‌ வகையில்‌ சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம்‌. சிலர்‌ ஊர்‌ விட்டு ஊர்‌ செல்லும்‌ நிலை உருவாகும்‌.உங்கள்‌ முயற்சிகளில்‌ தடைகளையும்‌ உருவாக்கலாம்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 7-ம்‌ இடமான மேஷத்திற்கு வருகிறார்‌. இதுவும்‌ சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. இங்கு அவரால்‌ இடப்‌ பெயர்ச்சியையும்‌, அவப்பெயரையும்‌ சந்திக்க நேரலாம்‌. சிலர்‌ கெட்டவர்களோடு சேரும்‌ சூழ்நிலை உருவாகும்‌ யாரிடமும்‌ கவனமாக பழக வேண்டும்‌. தற்போது கேது 2-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. அவரால்‌ நன்மை தர இயலாது...

அரசு வகையில்‌ அனுகூலமான போக்கு இருக்காது. அரசின்‌ வகையில்‌ சிக்கல்‌ வரலாம்‌. கேது சாதகமற்ற இடத்தில்‌ இருக்கிறார்‌ என்று கவலை கொள்ள தேவை இல்லை. காரணம்‌ அவரது பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு 11-ம்‌ இடமான சிம்மத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்‌ மூலம்‌ காரிய அனுகூலம்‌ ஏற்படும்‌. மகிழ்ச்சி அதிகரிக்கும்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று உங்கள்‌ ராசிக்கு வருகிறார்‌. இதுவும்‌ சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. ஆனால்‌ பழைய கெடுபலன்கள்‌ இனி இருக்காது. அவர்‌ சிறுசிறு தடையையும்‌, உடல்‌ உபாதையையும்‌ தரலாம்‌. அதற்காக கவலை கொள்ள வேண்டாம்‌. காரணம்‌ கேதுவின்‌ பின்னோக்கிய 11- ம்‌ இடத்துப்‌ பார்வை உங்கள்‌ ராசிக்கு 3-இடமான தனுசு ராசியில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌.



இதனால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்‌. தெய்வ அனுகூலம்‌ கிடைக்கும்‌. பொருளாதார வளம்‌ மேம்படும்‌. குரு 5-ம்‌ இடமான கும்ப ராசியில்‌ இருக்கிறார்‌.இது மிகவும்‌ சிறப்பான நிலை. குடும்பத்தில்‌ மகிழ்ச்சியைத்‌ தருவார்‌. திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்‌. பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்‌. பெண்களால்‌ மேன்மை கிடைக்கும்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌. இதனால்‌

வாழ்க்கையில்‌ வளம்‌ காணலாம்‌. மேலும்‌ அவரது 5,7-ம்‌ இடத்துப்‌ பார்வைகள்‌ சாதகமாக அமைந்துள்ளது. இதனால்‌ மேலும்‌ நன்மைகள்‌ அதிகரிக்கும்‌. ஆனால்‌ அவர்‌ ஏப்ரல்‌14-ந்‌ தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 6-ம்‌ இடமான மீன ராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. அவரால்‌ உடல்நலம்‌ பாதிக்கப்படும்‌. மனதில்‌ தளர்ச்சி ஏற்படும்‌. ஆனால்‌ அப்போது குருவின்‌ 9-ம்‌ இடத்துப்‌ பார்வை சிறப்பாக உள்ளது.

இதனால்‌ துணிச்சல்‌ பிறக்கும்‌. பணவரவு கூடும்‌. தேவையான பொருட்களை வாங்கலாம்‌. பகைவர்களின்‌ சதி உங்களிடம்‌ எடுபடாது. சனிபகவான்‌ 4-ம்‌ இடத்தில்‌ இருக்கிறார்‌. இது அவ்வளவு சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. சனி வீண் விரோதத்தை கொடுப்பார்‌. ஊர்‌ விட்டு ஊர்‌ செல்லும்‌ நிலை உருவாகும்‌. இதைக்‌ கண்டு ஆஞ்ச வேண்டாம்‌. சனி சாதகமற்ற இடத்தில்‌ இருந்தாலும்‌ அவரது 3-ம்‌ இடத்துப்‌ பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன்‌ மூலம்‌ நன்மை கிடைக்கும்‌. அவர்‌ 2023 மார்ச்‌ 29-ஆம் தேதி அன்று 5-ம்‌ இடமான கும்பத்திற்கு செல்கிறார்‌. இதுவும்‌ சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. ஆனால்‌ அப்போது அவரது 7-ம்‌ இடத்துப்‌ பார்வை மூலம்‌ நற்பலனை தருவார்‌.

இனி விரிவான பலனை காணலாம்‌

முக்கிய கிரகங்கள்‌ எதுவும்‌ சாதகமாக இல்லாத காலக்கட்டம்‌. எடுத்த காரியத்தில்‌ அவ்வப்போது தடைகள்‌ வரும்‌. அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள்‌. பண வரவுக்கு தகுந்தாற்போல்‌ செலவும்‌ இருக்கும்‌. வீண்‌ வாக்கு வாதத்தில்‌ ஈடுபடவேண்டாம்‌. சுபநிகழ்ச்சிகள்‌ தாமதம்‌ ஆகலாம்‌. பொருட்கள்‌ திருட்டு போக வாய்ப்பு உண்டு. இருப்பினும்‌ குருவின்‌ 9-ம்‌ இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்‌. துணிச்சல்‌ பிறக்கும்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு பொன்‌, பொருள்‌ கிடைக்கும்‌. பெண்கள்‌ மிக உறுதுணையாக இருப்பர்‌. தம்பதியினரிடையே அன்பு பெருகும்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌.

உத்தியோகத்தில்‌ பளுவும்‌, அலைச்சலும்‌ இருக்கும்‌. சிலருக்கு திடீர்‌ இடமாற்றம்‌ ஏற்படலாம்‌. தனியார்‌ துறையில்‌ வேலை பார்ப்பவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம்‌ கிடைக்கும்‌. அரசு வேலையில்‌ இருப்பவர்கள்‌ வேலையில்‌ அதிக அக்கறையுடன்‌ இருக்கவும்‌. குருவின்‌ பார்வையால்‌ வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும்‌ இல்லை.

வியாபாரம்‌ இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பணவிரையம்‌ ஏற்படலாம்‌. வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்க வைக்க வேண்டியது இருக்கும்‌. அரசு வகையில்‌ இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு மறையும்‌. சிலர்‌ தீயோர்‌ சேர்க்கையால்‌ பணத்தை விரயமாக்கலாம்‌. எனவே யாரிடமும்‌ பார்த்து எச்சரிக்கையுடன்‌ பழகவும்‌. ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும்‌ பூஜை பொருள்ட்கள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ அதிக லாபத்தை பெறுவர்‌. குருவின்‌ 9-ம்‌ இடத்துப்‌ பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ பகைவர்களின்‌ சதி உங்களிடம்‌ எடுபடாது. அவர்கள்‌ சரண்‌ அடையும்‌ நிலை ஏற்படும்‌. குடும்ப பிரச்சினையை தொழிலில்‌ காட்டாமல்‌ இருந்தால்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையலாம்‌.

கலைஞர்களுக்கு

 புதிய ஒப்பந்தங்கள்‌ சீராக கிடைக்கும்‌. அலைச்சல்‌ அதிகரிக்கும்‌. வெளியூர்‌ வாசம்‌ நிகழும்‌. அரசியல்வாதிகள்‌, சமூகநல சேவககர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

அரசியல்வாதிகள்‌ 

சிலர்‌ மனஉழைச்சலுடன்‌ காணப்படுவர்‌.

மாணவர்கள்‌ ஆசிரியர்களின்‌ உதவியை கேட்டு பெறுவது நல்லது. குருவின்‌ பார்வையால்‌ தேர்வுகள்‌ சிறப்பாக எழுதுவீர்கள்‌.

விவசாயம்‌

 சீராக இருக்கும்‌. உழைப்பே உங்கள்‌ முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள்‌. விவகாரங்கள்‌ சுமாராக இருக்கும்‌.

பெண்கள்‌ 

குடும்பத்தாரிடம்‌ விட்டுக்‌ கொடுத்து போகவும்‌. சிலர்‌ ஊர்விட்டு ஊர்‌ செல்லும்‌ நிலை உருவாகும்‌. வீட்டினுள்‌ சிற்சில பிரச்சினை வரலாம்‌. பொருள்‌ இழப்பு ஏற்படலாம்‌. வேலைக்கு செல்லும்‌ பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்‌. உங்கள்‌ பொறுப்புகளை தட்டிகழிக்காமல்‌ செய்யவும்‌. பூ வியாபாரம்‌ செய்யும்‌ பெண்கள்‌ நல்ல வருமானத்தை பெறுவர்‌. உடல்‌ நலனை பொறுத்தவரை கேதுவால்‌ சிற்சில உபாதைகள்‌ வந்தாலும்‌ பாதிப்புகள்‌ ஏற்படாது.

பரிகாரம்‌- 

சந்தர்ப்பம்‌ கிடைக்கும்‌ போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள்‌. சனிபகவானுக்கு எள் சோறு படைத்து அதை காக்கைக்கு போடுங்கள்‌. துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள்‌. ராகு காலத்தின்‌ பைரவருக்கு தயிர்‌ சாதம்‌ படைத்து வழிபடலாம்‌. ஏப்ரல்‌ 13-ந்‌ தேதிக்கு பிறகு சிவாலயம்‌ சென்று தட்சிணாதூர்த்தியையும்‌ வணங்குங்கள்‌.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES