Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 February 2022

PMMVY தாய்மார்களுக்கு உதவித் தொகை


தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் கணவரின் ஆதார் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டத்தை மத்திய அரசு 2010ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து பிரசவ உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்துகிறது. 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் தங்களது முதல் பிரசவத்துக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த தாய்மையைப் போற்றுவோம் திட்டத்தின் மூலம் பேறுகால உதவியாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பேறுகால உதவித்தொகை பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கணவரின் அதார் அட்டையை வழங்க வேண்டியது அவசியமாகும். ஆனால், கணவரைப் பிரிந்த பெண்களும் விதவைப் பெண்களும் தங்களது கணவரின் ஆதாரை வழங்குவதில் சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதில் சலுகை வழங்கியுள்ளது.

இத்திட்டம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, கைவிடப்பட்ட தாய் மற்றும் தனியாக வசிக்கும் தாய்மார்கள், கணவரின் எழுத்துப்பூர்வ சம்மதம் மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை என அறிவித்துள்ளார். பிரதமரின் தாய்மையைப் போற்றுவோம் திட்டத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் இச்சலுகை தற்போடு சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய விதிமுறைப்படி, பயனாளிகள் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தனது சம்மதத்தையும், தனது கணவரின் சம்மதத்தையும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தால்தான் சலுகைகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES