Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 January 2022

தை திங்களை தமிழ் புத்தாண்டு எனக் கொண்டாட காரணம் என்ன?

தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ் புத்தாண்டு எனக் கொண்டாட காரணம் என்ன? என்ற கேள்விக்கு விடை காணும் முன்னர், புத்தாண்டு என்றால் என்ன என்று அறிவோமா?

புத்தாண்டு என்றால் என்ன?

ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்று கணக்கிடும்போது, 365 நாட்கள் கழிந்துபோய், அடுத்ததாக வரும் நாளை புத்தாண்டு தொடங்கும் நாள் என்று கொள்கிறோம்.

உலகோர் அனைவருக்கும் ஒரே முறையில் பொதுவான ஆண்டு கணக்கீடு முறை உள்ளதா?

இல்லை. பல்வேறு ஆண்டு கணக்கீடு முறைகள் இவ்வுலகில் என்றாலும், கிறித்துவ முறையை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக் கணக்கீடு பெரும்பான்மை மக்கள் உலகெங்கும் கடைப்பிடிக்கின்றனர்.

இந்திய மக்கள் அனைவருக்குமான, அல்லது இந்துக்கள் அனைவருக்குமான பொது ஆண்டுக் கணக்கீடு உள்ளதா?

இல்லை. இல்லவே இல்லை!

பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் வெவ்வேறு ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுகின்றனர்.

பல்வேறு தேசிய இன மக்களின் புத்தாண்டுகள், பொது ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில், அதாவது, சனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தொடங்குவதைக் காட்டும் கீழ்க்கண்ட அட்டவணையைக் காண்க.[1]


கேரளாவில், கொல்லம் ஆண்டு, விஷு என்ற இரண்டு ஆண்டுக் கணக்குகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. சமற்கிருத ஆண்டுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று எப்படித் திணிக்க இயலும்?

ஆண்டு இறுதியில் பழையன போக்கும் 'போகி'யே, புத்தாண்டு தை-1 என்பதை வழிமொழியும் சாட்சி !

ஆண்டு இறுதி 'போ(க்)கி'யும், புத்தாண்டு தை-1ம் அடுத்தடுத்துக் கொண்டாடப்படுவதால், தை-1 மட்டுமே தமிழர் புத்தாண்டு என்று அறிக!

முந்தைய தமிழர் ஆண்டு இறுதியில், பழையன கழிதலும், தமிழர் புத்தாண்டு தைத் திங்களை வரவேற்கும் தை-1 புத்தாண்டுக் கொண்டாட்டமும், பொங்கல் பெருநாள் விழாவும் சீராக அமைந்துள்ளதை நோக்குக!

தமிழ்ப்புத்தாண்டு தை திங்கள் 1ம் தேதி தொடங்கும் முன்னர், முந்தைய ஆண்டின் கடைசி நாளில் பழைய வேண்டாத சிந்தனைகளை / குப்பைகளை நீக்கும் வழக்கம் 'போக்கி' (போகி) என்று கொண்டாடப்படுவதே, தைத்திங்கள் 1ம் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நிறுவும் வலிமையான பண்பாட்டு அசைவு என்று முது-முனைவர் தமிழறிஞர் சத்தியவேல் முருகனார் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது.

சித்திரை-1 : தமிழர்களுக்கு கனிகாணும் திருவிழா! சமற்கிருதப் புத்தாண்டு! தமிழர்களுக்குப் புத்தாண்டல்ல!

சித்திரை 1ம் தேதி கனிகாணும் நாள் என்றுதான் தமிழர்களும், முன்னைச் சேரநாட்டுத் தமிழர்களும், இன்றைய மலையாளிகளும் கொண்டாடுகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.

கி.பி. 823-ல் இந்த ஆண்டு முதலாக, கேரளத்தில் காலத்தை அறிய கொல்ல ஆண்டு முறையையே பயன்படுத்தியதாக சொல்கிறது மலையாளிகளின் தொன்மம். வேணாட்டு அரசர் உதய மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த ஆண்டினை பயன்படுத்தினார் எனக் கருதுகின்றனர். சிங்கம், கன்னி உட்பட 12 மலையாள மாதங்கள் உள்ளன.

சம்ஸ்கிருத ஆண்டை, தமிழர்கள் தலையில், இதுகாலம் வரை சுமத்தியிருந்தார்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய தமிழ்க் குடிகள் வழிவந்த அறிஞர்கள் திருவள்ளுவர் ஆண்டு முறையையும், தைத்திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டு எனவும் கண்டனர்.



தை திங்கள் ஒன்றாம் நாள் புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழ் இனத்தின் உரிமை.

தமிழில் ஆண்டுகளைக் குறிக்க பல ஆண்டுத்தொடர்கள் பயன்பட்டுள்ளன. சக ஆண்டு, விக்கிரம ஆண்டு, கலி ஆண்டு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் கொல்லம் நாட்காட்டி பயன்பட்டு வந்தது. ஆனால், இவை எதுவுமே தமிழர்க்குத் தனித்துவமானவை அல்ல. இந்நிலையிலேயே தமிழருக்கென சிறப்பான நாட்காட்டி ஒன்றை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டது.

திருவள்ளுவர் ஆண்டு - தமிழரின் நாட்காட்டி!

மறைமலையடிகள் ஏற்கனவே திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என்று கணித்திருந்தார். நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ, கலைஞர் கருணாநிதி, வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடி வந்த கா.பொ.இரத்தினம் உட்பட பெரும்பாலான தமிழறிஞர்கள் சித்திரைப்புத்தாண்டு ஆரியர் திணித்தது என்ற கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.[2]

இந்தப்பின்னணியில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் தி.மு.க அரசு, தைத்திருநாளிலேயே ஆரம்பமான திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அந்நாளில் "திருவள்ளுவர் ஆண்டு" எனும் ஆண்டுத்தொடரை அறிமுகப்படுத்தியது.[3]

1971இல் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாட்டு அரசிதழில் வெளியாகி, 1972இல் நடைமுறைக்கும் வந்தது. 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், அதை சகல அரச ஆவணங்களிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார்.

சித்திரை 1: ஆரியப் பார்ப்பனர்களுக்குப் புத்தாண்டு! தமிழர்களுக்குக் கனிகாணும் பெருவிழா!

சிக்கிம் என்ற சின்னஞ்சிறு மாநிலத்தின் பல்வேறு இனக் குடிகள் நான்கிற்கும் மேற்பட்ட புத்தாண்டுகளைக் கொண்டாடும்போது, தமிழ்நாட்டில் வாழும் ஆரியப் பார்ப்பனர்கள் சித்திரை 1ம் நாளை சமஸ்கிருதப் புத்தாண்டாகக் கொண்டாடுவது சரியே!

தமிழர்களும் சித்திரை-1ஐக் கொண்டாடுவோம், கனிகாணும் திருவிழாவாக! ஆரியப் பார்ப்பனர்களுக்கும், சனாதனக் கோட்பாட்டாளர்களுக்கும் தமிழர்களாகிய நாம் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வோம்! நட்போடு வாழ்வோம்! இதுவே, வேற்றுமையில் ஒற்றுமை!

தைத்திங்கள் 1: தமிழர்களுக்குப் புத்தாண்டு! ஆரியப் பார்ப்பனர்களுக்கு மகரசங்கராந்தி!

அதுபோல், தைத்திங்கள் 1ம் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும், பொங்கல் திருநாளாகவும் தமிழின மக்கள் கொண்டாடுவார்கள். எப்போதும்போல், தமிழகத்தில் வாழும் ஆரியப்பார்ப்பனர்களும், இந்துத்துவ சனாதனிகளும், மகரசங்கராந்தியாகக் கொண்டாடட்டும். எந்தக் குழப்பமும் இல்லை.

காலம் காலமாக, தமிழகமெங்கும் வாழும்
தமிழர்கள் தைத்திங்கள் ஒன்றாம் நாளில், வாசலில் பொங்கலிட்டு, சூரியனை வழிபட்டு, விழாக்கொண்டாடுகையில் பார்ப்பனர்கள் எப்போதாவது கலந்துகொண்டதுண்டா?

ஏன் கலந்துகொள்ளவில்லை என்று பார்ப்பனர்களைத் தமிழர்களும் வினவியதுண்டா?

இரண்டும் இல்லை! ஏனென்றால், தமிழர்களாகிய நாம் அறிவோம் பார்ப்பனர்கள் நம் இனம் அல்லவென்றும், இந்நாள் பார்ப்ப்பனர்களுக்கு மகரசங்கராந்தி என்றும் !

தமிழர்களுடைய புத்தாண்டு எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும், பொறுப்பும், தமிழர்களுடையது! அதில் தேவையின்றி, ஆரியப் பார்ப்பனர்கள் மூக்கை நுழைப்பது வன்மை.

ஊடகங்களும், பார்ப்பன அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலரையும், தமிழே சரிவர அறியாத சிலரையும் விவாத அரங்குக்கு அழைத்து, தமிழர்களின் புத்தாண்டு சித்திரை-1ஆ, தை-1ஆ என்று சண்டையை ஊதிப் பெருக்கும் வேலை

அதை விடுத்து, தமிழர்களின் புத்தாண்டு கொண்டாடும் உரிமையில் தலையிடும் வேலையைச் செய்யும் அனைத்து சக்திகளும் பெரும்பான்மைத் தமிழர்களால் புறம் தள்ளப்படுவார்கள் என்பது திண்ணம்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES