Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 January 2022

9,499 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு: ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் TET தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 9,499 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டில் 6 தேர்வுகளை நடத்தி தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,499 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான ஆண்டுத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.




Teachers Recruitment Board


அதன்படி, 2407 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 3902 இடைநிலை ஆசிரியர்கள், 1087 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 4989 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1334 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்திலும் நடைபெறவுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

9,499 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு: ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் TET தேர்வு

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES