Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 December 2021

ஒரே ஸ்மார்ட்போனில் இரு whatsapp செயலி



Android குளோன் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்கள் இரண்டும் ஒரே மொபைலில் இரண்டு WhatsApp எண்களைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.

வாட்ஸ்அப் ஒரு சிறந்த செய்தியிடல் தளம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரே சாதனத்தில் இரண்டு வெவ்வேறு கணக்குகளுக்கான ஆதரவு இல்லாததால், ஒரே தொலைபேசியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் எண்களை அணுக மெசேஜிங் தளம் யூசர்களை அனுமதிப்பதில்லை. இருப்பினும், இதற்கு பல தீர்வுகள் உள்ளன. தனிப்பயன் Android குளோன் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்கள் இரண்டும் ஒரே மொபைலில் இரண்டு WhatsApp எண்களைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. அதை எப்படி செய்வது என்பதை பின்வருமாறு காணலாம்.

ஆண்ட்ராய்டு மொபைல் போனில் டூயல் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவது எப்படி? Xiaomi, OPPO, Realme, Samsung மற்றும் Vivo போன்ற பல ஆண்ட்ராய்டு ஃபோன் தயாரிப்பாளர்கள் தங்களின் தனிப்பயன் குளோன்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஸ்கின்கள் ஆண்ட்ராய்டில் இயங்கும் மற்றும் ஆப் க்ளோனிங் உட்பட சில நிஃப்டி அம்சங்களை உள்நாட்டில் கொண்டு வந்துள்ளன.

இந்த அம்சம் ஒவ்வொரு விற்பனையாளராலும் வித்தியாசமாக சந்தைப்படுத்தப்படுகிறது. அதாவது Xiaomi இதை Dual Apps என்று அழைக்கிறது. OPPO, Vivo மற்றும் Samsung ஆகியவை முறையே குளோன் ஆப்ஸ் என்று அழைக்கின்றன. இதன் மூலம் வாட்ஸ்அப் போன்ற ஆப்களை நகல் எடுத்து, அதில் வேறுஒரு எண்ணிற்கு பயன்படுத்த முடியும். வெவ்வேறு சாதனங்களில் இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காணலாம்.

சாம்சங்கில் எவ்வாறு டூயல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்?

* செட்டிங்ஸ் மெனுவிற்குச் சென்று அட்வான்ஸ் ஃபீச்சரை தேர்ந்தெடுக்கவும்
* கீழே ஸ்க்ரோல் செய்து டூயல் மெசஞ்சரில் டாப் செய்யவும்.

* Dual Messenger உடன் இணக்கமான ஆப்ஸின் பட்டியல் காட்டப்படும். அதில் வாட்ஸ்அப்பின் சுவிட்சை மாற்றவும்

* இன்ஸ்டால் செய்ய டாப் செய்து -> குறிப்புகளை படித்து, மேலும் தொடர உறுதிப்படுத்து என்பதைத் டாப் செய்யவும்.

* இப்போது குளோன் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஐகானின் கீழ் வலது பக்கத்தில் டூயல் மெசஞ்சர் சின்னம் இருக்கும்.

Realme மொபைல் போன்களில் டூயல் வாட்ஸ்அப் கணக்கு:

* Realme மொபைல் போன்களில் ஆப் குளோனிங் செய்ய நீங்கள் செட்டிங்ஸ்-க்கு செல்ல வேண்டும்

* அங்கு நீங்கள் ஆப் க்ளோனரைத் தேடலாம் அல்லது ஆப் மேனேஜ்மென்ட் -> ஆப் க்ளோனருக்குச் செல்லலாம்.

* அதில் வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து குளோன் ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்

* குளோன் செய்யப்பட்ட ஆப்பை மறுபெயரிடுவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்

* அது முடிந்ததும், உங்கள் Realme மொபைல் போனில் இரட்டை வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும்.

OnePlus மொபைல் போன்களில் டூயல் வாட்ஸ்அப் கணக்கு:

* OnePlus யூசர்கள் தங்கள் சாதனத்தின் செட்டிங்கிற்கு செல்லலாம். அதைத் தொடர்ந்து யுடிலிட்டிஸ் மற்றும் பேர்லல் ஆப்ஸை தேர்தெடுக்கவும்.

* மாற்றாக, அவர்கள் தொலைபேசியின் செட்டிங்ஸ் மெனுவிலிருந்து பேர்லல் ஆப்ஸை தேர்ந்தெடுக்கலாம்.

* அதன் குளோனை உருவாக்க WhatsApp க்கு அடுத்துள்ள பட்டனை மாற்றவும்

* அடுத்து, உங்கள் OnePlus மொபைல் ஃபோனில் இரட்டை வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த குளோன் செய்யப்பட்ட பயன்பாட்டின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ரெட்மி மொபைல் போன்களில் டூயல் வாட்ஸ்அப்:

நீங்கள் Redmi, Mi அல்லது POCO ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தினாலும், WhatsApp உள்ளிட்ட பயன்பாடுகளை குளோன் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

* குறிப்பிட்ட தொலைபேசியில் செட்டிங்ஸ்-க்கு செல்லவும்

* பின்வரும் திரையில் இருந்து Apps மற்றும் Dual Apps என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

* நீங்கள் முதல் முறையாக இதைச் செய்தால், ஒரு முன்னோட்டத் திரை தோன்றும். பின்னர் அதை தொடர உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

* பின்னர் ஆப் குளோனிங்கை ஆதரிக்கும் செயலிகளின் பட்டியல் உங்கள் திரையில் தோன்றும்

* அதில் வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து, இரட்டை பயன்பாடுகளுக்கு மாறவும்
* இப்போது திரையில் ஒரு செய்தி தோன்றும். அதில், இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

* இரட்டை பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டதாக மற்றொரு செய்தி உங்கள் திரையில் தோன்றும் அதை அணுக, உங்கள் மொபைலின் ஆப் டிராயருக்குச் செல்லவும்.

* ஐகானின் கீழ் இடதுபுறத்தில் இரட்டை ஆப் சின்னத்துடன் கூடிய செயலி உங்கள் குளோன் செய்யப்பட்ட செயலியாக இருக்கும்.

Vivo மொபைல் போன்களில் டூயல் வாட்ஸ்அப்:

* போனின் செட்டிங்ஸ் மெனுவிற்குச் சென்று ஆப் குளோன் வசதியைப் பார்த்து அதில் வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

* மாற்றாக, ஆப்பை குளோன் செய்ய வாட்ஸ்அப் செயலியை நீண்ட நேரம் பிரஸ் செய்யும் போது ‘+’ ஐகான் தோன்றும்.

பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மற்றொரு வாட்ஸ்அப் எண்ணை கொண்டு டூயல் வாட்ஸ்அப் கணக்கை திறப்பது தான்.

OPPO மொபைல் போன்களில் டூயல் வாட்ஸ்அப்:

* நீங்கள் OPPO மொபைல் போன்களின் செட்டிங்ஸ் பக்கத்திற்குச் செல்லவும்

* ஆப் மேனேஜர் -> ஆப் க்ளோனர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

* வாட்ஸ்அப்பைத் தேர்வுசெய்யவும், அவ்வளவுதான், உங்கள் மற்றொரு எண்ணிற்கு புதிய கணக்கை திறக்கலாம்.

ஐபோனில் டூயல் வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துவது

* வாட்ஸ்அப் பிசினஸ் செயலியானது வணிகச் செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கானது என்றாலும், ஒரே மொபைலில் உங்கள் இரண்டாம் வாட்ஸ்அப் கணக்காக அதைப் பயன்படுத்தலாம்.

* வாட்ஸ்அப் பிசினஸ் செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைக்கிறது. அதாவது மேற்கூறிய வழிமுறைகள் மூலம் WhatsApp Business ஆப்பை டவுன்லோட் செய்து Android பயனர்கள் ஒரே சாதனத்தில் மூன்று WhatsApp எண்களைப் பயன்படுத்த முடியும்.

* வாட்ஸ்அப் பிசினஸ் ஆப்பின் செட்டிங் வழக்கமான வாட்ஸ்அப் செட்டிங் போலவே இருக்கும்.

* இருப்பினும், பயன்பாட்டின் தன்மை காரணமாக, தானியங்கு பதில்கள், புதுப்பிப்புகளை அனுப்புதல் மற்றும் உங்கள் தொடர்புப் பட்டியலில் லேபிள்களைச் சேர்ப்பது போன்ற கூடுதல் அம்சங்கள் உங்களுக்கு கிடைக்கும்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES