Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 December 2021

PAN CARD ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்...



e pan: பதிவிறக்கம் செய்ய உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

எந்த ஒரு ஒரு அரசாங்க சலுகைகளையும் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு தேவைப்படுகிறது. PAN என்பது 10 இலக்கக் குறியீடாகும். பான் அட்டைகளை தற்போது வீட்டில் இருந்தே டவுன்லோடு செய்ய முடியும். அதேபோல இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்தாலோ அல்லது தவறுகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை கூட ஆன்லைனில் இருந்தே செய்து கொள்ளலாம்.

மேலும் ஆதார் அட்டை மற்றும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருப்பவர்கள் PAN அல்லது e-PAN அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து 5 நிமிடங்களுக்குள் பெற முடியும். UTIITSL மற்றும் NSDLன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் PANக்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் e-PAN-ஐ டவுன்லோடு செய்ய கீழ்காணும் இரண்டு முறைகளை பின்பற்றலாம்.,

1. UTIITSL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.myutiitsl.com/panonlineservices/CSCLogin என்ற பக்கத்திற்கு செல்லவும்.

2. NSDL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தளமான https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html-ல் சென்று பிறந்த தேதி மற்றும் பான் எண்ணை பயன்படுத்தி e-PANஐ டவுன்லோடு செய்யலாம்.

UTIITSL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து e-PAN ஐ டவுன்லோடு செய்யவதற்கான படிப்படியான முறைகள் குறித்து இங்கு காண்போம்.,

1: https://www.myutiitsl.com/PAN_ONLINE/ePANCard என்ற பக்கத்திற்கு செல்லவும்.

2: பின்னர் உங்கள் PAN எண், GSTIN எண், பிறந்த தேதி மற்றும் போன்ற விவரங்களை கொடுக்கவும்.

3: இப்போது submit என்பதை கிளிக் செய்யவும்.

4: இதனை தொடர்ந்து தற்போது தோன்றும் திரையில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் காட்டப்படும். இதில் உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து கேப்ட்சாவை உள்ளிடவும்.

5: பின்னர் கீழே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ok என்பதை கிளிக் செய்யவும்.

6: பின்னர் 'Get OTP' என்பதை கிளிக் செய்யவும்.

7: அடுத்த பக்கத்தில், OTP-ஐ உள்ளிட்டு பணம் செலுத்தவும்.

8: பணம் செலுத்தியதும் நீங்கள் உங்கள் e-PAN- ஐ டவுன்லோடு செய்யலாம்.

NSDLல் e-PANஐ டவுன்லோடு செய்யும் முறைகள் :

1: https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html என்ற பக்கத்திற்கு செல்லவும்.

2: இப்போது acknowledgment number மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

3: பின்னர் submit என்பதைக் கிளிக் செய்யவும்.

4: அடுத்த பக்கத்தில், உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் காட்டப்படும். விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.

5: பின்னர் 'OTP-ஐ உருவாக்கு' என்பதை கிளிக் செய்யவும்.

6: அடுத்த பக்கத்தில், OTP-ஐ உள்ளிட்டவும்.

7: இப்போது நீங்கள் e-PANன் PDF நகலை டவுன்லோடு செய்ய முடியும்.

பான் எண் மூலம் இபான் கார்டு டவுன்லோடு செய்யும் முறைகள் :

1: UTIITSL அல்லது NSDL இணையதளத்தைப் பார்வையிடவும்.

2: இப்போது ‘இ-பான் கார்டைப் பதிவிறக்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

3: உங்கள் பான் எண், பிறந்த தேதி, ஆதார் எண் மற்றும் ஜிஎஸ்டிஎன் (பொருந்தினால்) ஆகியவற்றை கொடுக்கவும்.

4: கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

5: பின்னர் நீங்கள் வழங்கிய விவரங்களைச் சரிபார்த்து, 'submit ' என்பதைக் கிளிக் செய்யவும்.

6: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP-ஐ பெறுவீர்கள். சரிபார்ப்பு செயல்முறையை தொடங்க OTP-ஐ உள்ளிட்டு, 'தொடங்கு' என்பதை கிளிக் செய்யவும்.

படி 7: சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், 'pdf பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும். ஆவணம் பதிவிறக்கம் செய்யப்பட்டதும், உங்கள் பிறந்த தேதியான கடவுச்சொல்லை வழங்குவதன் மூலம் அதை திறந்து பார்க்க முடியும்.

ஆதார் மூலம் இ-பான் கார்டு டவுன்லோடு செய்யும் முறைகள் :

1: www.incometaxindiaefiling.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தை பார்வையிடவும்.

2: இப்போது ‘Instant PAN through Aadhaar’ என்பதை கிளிக் செய்து பின்னர் ‘Quick Links’ என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

3: பின்னர் 'Get New PAN' என்பதை கிளிக் செய்யவும்.

4: இப்போது உங்கள் ஆதார் எண்ணை கொடுக்கவும்.

5: பின்னர் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

6: இதனை தொடர்ந்து ‘Generate Aadhaar OTP’ என்பதை கிளிக் செய்யவும்.

7: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிடவும்.

8: இப்போது மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் acknowledge numberஐ பெறுவீர்கள்.

Incometaxindiaefiling இணையதளத்தில் இருந்து ePAN ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

உங்களின் ePAN-ஐ அதிகாரப்பூர்வ இன்கம்டாக்ஸ் இந்தியா ஃபைலிங் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

1: முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2: seacrh விருப்பத்தில் ePAN பீட்டா பதிப்பை கிளிக் செய்யவும்.

3: பின்னர் 'Check instant ePAN status’ என்பதைக் கிளிக் செய்யவும்

4: இப்போது திரையில் 15-டிஜிட் acknowledgement எண்ணை உள்ளிடவும்.

5: பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ‘Submit’ பொத்தானை கிளிக் செய்யவும்.

6: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி OTP-ஐ உருவாக்கி அதை சமர்ப்பிக்கவும்

7: இதற்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்கள் PAN விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸை கண்காணிக்க முடியும். ePAN கார்டு ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அதனை தற்போது உங்களால் டவுன்லோடு செய்ய முடியும்.

பான் கார்டை பதிவிறக்கம் செய்ய தேவையான ஆவணங்கள் :

உங்கள் பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES