Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 December 2021

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமா...! மாநில அரசுக்கு இணையான ஊதியமா...?

தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு அதில் தற்போதைய திமுக அரசு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது என பல்வேறு காரணங்களை கூறி மறுத்து உள்ளது. இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தும் பொய்யானவை.... வேண்டுமென்றே ஒரு அரசே ஆசிரியர்களை ஏமாற்று வேலைகளை செய்கிறது. இதே பதிலை 2014ஆம் ஆண்டே அவர்கள் தொடுத்த வழக்கில் ஏற்கனவே மறுத்து கூறி விட்டது.

அரசு சென்னை & மதுரை உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க மறுத்தும், அதை தெரிந்தும் ஏன் என்று தெரியவில்லை மீண்டும் அதே நீதிமன்றத்தில் ஏழு வருடம் கழித்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது என கூறினர். ஆனால் மீண்டும் முதலில் இருந்து தொடங்குகிறது. மேலும் கடந்த அரசு வழங்கிய அதே பதிலையே மீண்டும் அரசு தரப்பில் தற்போதும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கினால் மிகுந்த நிதிச்சுமை ஏற்படும். மேலும் இது கொள்கை முடிவு , இதில் நீதிமன்றம் தலையிட கூடாது என அரசு வாதாடுகிறது.

உச்ச நீதிமன்றம் 2002ல் ஒரு வழக்கில் "ஹரியானா மாநில அரசு ஊழியர்கள் பணி வேறு மத்திய அரசு பணியாளர்கள் பணி வேறு" என அரசு ஊழியர்கள் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி அரசு தற்போதைய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நமது தரப்பிலும் அதனையே மீண்டும் மீண்டும் பல முறை கூறி வருகிறோம். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு ஒரு சதவீதம் கூட சாத்தியம் கிடையாது.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் தற்போதைய திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான "சம வேலைக்கு" "சம ஊதியம்" என்ற கோரிக்கையை முதல் கட்டமாக நிறைவேற்றுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். அதுக்கு மட்டுமே வாய்ப்புகள் உள்ளது மற்ற இல்லாத வாய்ப்புகளை இருப்பதாக காட்டி மீண்டும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களை படுகுழியில் தள்ள வேண்டாம். அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர இக்கோரிக்கையை வலியுறுத்தினால் ஒரு மாதத்திலேயே இப்பிரச்சனை முடியும்.

2009-க்கு பின் நியமனம் பெற்று கிட்டதட்ட 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மாநில அரசுக்கு இணையான ஊதியம் கூட பெற முடியாமல் கிட்டத்தட்ட கடைநிலை ஊழியர்களின் ஊதியம் பெற்று ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். குறைந்தபட்ச இந்த 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு முதலில் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" பெற்று விட்டு பின்னர் ஒட்டுமொத்தமாக அனைவரும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை கேட்கலாம் என்பதே தற்போதைக்கு சாலச்சிறந்த முடிவாகும்.

தத்தம் தம் இயக்கங்களில் இதற்கான அழுத்தங்களை அதிக அளவில் கொடுத்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். அரசு அது பற்றி சிறிதும் கவலை இல்லாமல் மற்ற விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது

புதிதாக நமக்கு எதையும் கொடுங்கள் என்று கேட்க வேண்டாம். திமுக தேர்தல் அறிக்கையில் 311ல் உள்ளதை செய்து கொடுங்கள் என்று கேட்டாலே போதும். முதல்வரும் ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையிலுள்ள எந்த கோரிக்கையும் விடுபடாமல் அனைத்தையும் செய்து முடிப்போம் என்று கூறிவருகிறார். எனவே மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இனியும் காலதாமதமின்றி செய்து முடித்தால் மட்டுமே👍🏻👍🏻👍🏻 இயக்கங்கள் அடுத்த தலைமுறைக்கு நகரும்.

இவண்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறாமல் குறைந்தபட்சம் மாநிலத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறாமல் வறுமையிலும், ஏழ்மையிலும், ஏமாற்றத்திலும், கொந்தளிப்பில இருக்கும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES