Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 December 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் 30 நாளில் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் குமார் பன்சால் மற்றும் ரீபக் பன்சால் ஆகியோர் தரப்பில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சோசிலிட்டர், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.50 ஆயிரம் மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிக்கையும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

இதையேற்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘இறப்பு சான்றிதழில் கொரோனாவால் உயிரிழந்தார் என்று குறிப்பிடவில்லை என்று காரணம் காட்டி நிவாரணத்தை வழங்க மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது’. கொரோனா இறப்பு சான்றிதழ் தொடர்பான குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்ய மாநில அரசுகள் மாவட்டம் தோறும், கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை ஒரு வாரத்தில் அமைக்க வேண்டும். நிவாரண நிதி முப்பது நாட்களில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் ‘கொரோனா மரணம்’ என குறிப்பிடவில்லை என்றாலும், இந்த நிவாரணத்தை பெறுவதற்கு உரிய அமைப்பை பாதிப்படைந்த குடும்பங்கள் அணுகலாம் என்றனர்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES