Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 November 2021

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு தீவிரம்: நகராட்சி கமிஷனர்கள் மாற்றம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாவதற்கான அறிகுறியாக, பல்வேறு நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலியாகவுள்ள பதவிகளுக்கு, புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. அதைதொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

புதிய மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், வார்டுகளை வரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இடஒதுக்கீடு அடிப்படையிலான வார்டு பிரிப்பு பணிகளில், சில இடங்களில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்படவுள்ள 11 நகராட்சி கமிஷனர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கரூர், பல்லாவரம், காஞ்சிபுரம், மலைமறை நகர், திருவண்ணாமலை, திருப்பத்துார், வாணியம்பாடி, ராணிபேட்டை, இடைப்பாடி, திருத்தஙகல், காங்கேயம் நகராட்சி கமிஷனர்கள் இதில் அடக்கம். இவர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, 12 இரண்டாம் நிலை நகராட்சி கமிஷனர்களுக்கு, முதல்நிலை நகராட்சி கமிஷனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குளச்சல், சிவகங்கை, ராசிபுரம், குமராபாளையம், ஆற்காடு, மணப்பாறை, ஆரணி, அறந்தாங்கி, அரக்கோணம், திருமங்கலம், தாராபுரம் நகராட்சிகளில் காலியாக இருந்த கமிஷனர் பதவிகளில் இவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், நகராட்சிகள், தலைமை செயலகம், நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்த 20 பேர், தேனி கூடலுார், நீலகிரி கூடலுார், பெரியகுளம், துவாக்குடி, வேதாரண்யம், ஜோலார்பேட்டை, குழித்துறை, விக்கிரமசிங்கபுரம்.மதுராந்தகம், கூத்தாநல்லுார், கீழக்கரை, பவானி, அரியலுார், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட இரண்டாம் நிலை நகராட்சிகளில் கமிஷனர்களாகவும், கமிஷனர்களின் நேர்முக உதவியாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா பிறப்பித்துள்ளார். இதன் வாயிலாக, நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES