Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 October 2021

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்து, முதன்மை பயிற்றுனர்களுக்கு பயிற்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்து, முதன்மை பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதற்காக பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்காக, மாநில அளவிலான முதன்மை பயிற்றுனர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடந்தன. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய தகவலியல் மைய அலுவலர்கள், இந்த பயிற்சியை வழங்கினர்.இதில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப இயக்குனர் ஜெயபாலன் மற்றும் தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இதுகுறித்த ஆய்வு கூட்டம், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, சட்ட ஆலோசகர் வெங்கடேசன், பேரூராட்சிகளின் கமிஷனர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் விசுமகாஜன் மற்றும் முதன்மை தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்த வசதியாக, நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலி பணியிடங்களை நிரப்புதல்; தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்தல்; கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஓட்டுச்சாவடிகளை நிர்ணயம் செய்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் இருப்பு; நகராட்சி, மாநகரட்சி முதன்மை பயிற்றுனர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிபுக்கான பயிற்சி அளித்தல்; ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி அளித்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர்தலை நடத்த வசதியாக, அனைத்து முன்னேற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ளவும், மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES