Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 October 2021

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மந்திரங்கள்- சரஸ்வதி காயத்ரி மந்திரம், ஸ்லோகம்


சரஸ்வதி தேவியை வணங்கும் போது அவருக்குரிய காயத்ரி மந்திரம், சரஸ்வதி மந்திரம் கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.அதிலும் குறிப்பாக ஆயுத பூஜை என்ப்படும் ச​ரஸ்வதி பூஜையின் போது அவருக்குரிய மந்திரத்தை உச்சரிக்கும் போது அன்னையின் நல்லருளைப் பெற்றிடலாம்.


கல்வி கடவுள் என வணங்கப்படும் சரஸ்வதி தேவி அனைத்திற்கும் மூலதனமாக திகழ்கிறார். எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியவர் அன்னை சரஸ்வதி. பல சிறப்புக்கள் கொண்ட சரஸ்வதி தேவியை வணங்கும் போது அவருக்குரிய காயத்ரி மந்திரம், சரஸ்வதி மந்திரம் கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

அதிலும் குறிப்பாக ஆயுத பூஜை என்ப்படும் சரஸ்வதி பூஜையின் போது அவருக்குரிய மந்திரத்தை உச்சரிக்கும் போது அன்னையின் நல்லருளைப் பெற்றிடலாம்.

எந்த பூஜைக்கு முன் முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபட்டு தொடங்க வேண்டும்.

விநாயகர் துதி:


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


விநாயகர் ஸ்லோகம்:


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


சரஸ்வதி காயத்ரி மந்திரம்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

பொருள்: மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.

சரஸ்வதி ஸ்லோகம்

“ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே”

இந்த மந்திரத்தை மாணவர்கள் மட்டுமில்லாமல் வேலை செய்பவர்களும் தினமும் 5 முறை மனதார உச்சரித்து சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். இதனால் மனதில் இருக்கும் பயம் நீங்கி நல்ல ஞாபக சக்தி, எதிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சமயோஜித புத்தி, அறிவாற்றல் அதிகரிக்கும்.

சரஸ்வதி தேவியை துதி


ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

இது சரஸ்வதி தேவியை துதிக்கப் பாவிக்கப்படும் எளிய மந்திர சுலோகம் இது!

சரஸ்வதி தேவி 108 போற்றி பாடல்


ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி

ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி

ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய்போற்றி

ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியேபோற்றி

ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி


ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி

ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி


ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி

ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி

ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி…

மாணவர்கள் கல்வியில் கடின உழைப்பைப் போடுவது போல, பணியாளர்கள் தங்கள் வேலையில் கடினமாக தங்கள் முன்னேற்றத்திற்கு கடினமாக உழைப்பதோடு, சரஸ்வதி தேவியின் அருளும் சேர்வதால், உங்களின் வெற்றி நிச்சயம். உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்களுக்கு தேர்வாக இருந்தாலும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலை இலக்காக இருந்தாலும் அதை சிறப்பாக அடைந்து நற்பெயர் பெறுவீர்கள்.






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES