Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 September 2021

மகப்பேறு விடுப்பில் செல்வோர்க்கு பதிலி ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு மாற்றாக ஒரு ஆண்டிற்கு அரசு பள்ளிகளில் அதே தகுதியுள்ள பதிலி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது, அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நியமனத்திற்கு மாணவர்கள் எண்ணிக்கையை 750 ல் இருந்து 450 ஆக குறைத்து, மாதம் ரூ.1000 மதிப்பூதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் இரவு காவலர், உதவியாளர், கிளார்க் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனரின் கீழ் பள்ளி தேர்வுகளை நடத்த தலைமை ஆசிரியர், முதுகலை, பட்டதாரி மொழி, பாட ஆசிரியர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும்.

மகப்பேறுவிடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு மாற்றாக அதே தகுதியுள்ள பதிலி ஆசிரியர்களை ஓராண்டிற்கு நியமிக்க வேண்டும்.அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களை வேறு பள்ளிகளை மாற்றி செல்ல அனுமதிக்க கூடாது. பிளஸ் 1, 2 வகுப்பிற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பயிற்றுநர் என அழைக்காமல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கம்ப்யூட்டர்) என அழைக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வுதமிழ்நாடு இடைநிலைஆசிரியர் சங்க பொதுசெயலாளர் ஏ.சங்கர் கூறியதாவது, உயர், மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறுகின்றனர். ஆறு முதல் 10 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிகரான கல்விதகுதி உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு தரம், பதவி உயர்வு அளிக்க வேண்டும். இது அரசுக்கான நிர்வாக பணி தான், நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES