Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 September 2021

கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதை காட்டும் ஆரம்ப அறிகுறிகள் - எச்சரிக்கும் மருத்துவர்கள்
2-வது அலையை விட இது கொடியதாக இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனிடையே அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து காணப்படும் கோவிட் பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது.

ஒன்றரை வருடங்களுக்கு முன் பரவ துவங்கிய கோவிட் -19 வைரஸ், பிற வைரஸ்களை போல வேகமாக உருமாறி கொண்டிருக்கின்றன. வைரஸ் பரவ துவங்கிய போது தடுப்பு மருந்துகள் இல்லை என்பதால் இந்த பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறின. தற்போது தடுப்பூசி பரவலாக போடப்பட்டு வந்தாலும் டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா உள்ளிட்ட பல உருமாறிய கோவிட் வைரஸ்களால் மக்களுக்கு அபாயம் நீடித்து வருகிறது.

தற்போதைய சூழலில், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவரும் கொடிய தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த மற்றும் திறம்பட சமாளிக்க புதிய வகை வைரஸ்கள் ஏற்படுத்தும் அறிகுறிகளை சரியாக கவனிக்க வேண்டும். நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பெருமளவில் ஓய்ந்து காணப்பட்டாலும், உருமாறிய கொரோனா வைரஸ் வேரியன்ட்கள் மூலம் எந்த நேரம் வேண்டுமானலும் மூன்றாம் அலை எழ கூடும் என்ற அச்சம் நம்மிடையே நிலவி வருகிறது.

ஒருசில கட்டுப்பாடுகளை தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் நிலையில், தளர்வுகள் மக்களால் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பலர் மாஸ்க் அணியாமல், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை காண முடிகிறது. இதனிடையே நாட்டை தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படும் கொரோன 3-வது அலை பற்றி நிறைய கணிப்புகள் உள்ளன, இது இரண்டாம் அலையை போலவே லட்சக்கணக்கான கோவிட் பதிவுகளை இந்தியாவில் ஏற்படுத்த கூடும்.

2-வது அலையை விட இது கொடியதாக இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனிடையே அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து காணப்படும் கோவிட் பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. இது கோவிட்டின் மூன்றாம் அலையோ என்ற சந்தேகமும் எழுகிறது. இது எவ்வளவு கடுமையானது அல்லது ஆபத்தானது என்பது இன்னும் தெளிவாக தெரியாது என்றாலும் அச்சுறுத்தல் நமக்கு அருகில் இருக்கலாம் என்பதை வெளிப்படுத்தும் வேறு சில காரணிகள் மற்றும் ஆரம்ப அறிகுறிகள் உள்ளன.

இதில் முக்கியமான் ஒன்று தான் ஆர் ஃபேக்டர் (R-factor). ஒரு நபர் எத்தனை பேருக்கு தொற்றை பரப்புகிறார் என்பதன் விகிதமே R-factor என்று குறிப்பிடப்படுகிறது. இது நோய் நேர்மறை மற்றும் பரவலின் சதவீதத்தை அளவிடுகிறது. இதன்படி பார்த்தால் சில மாநிலங்களில் அதாவது பரவல் விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. ஒரு பகுதி அல்லது மாநிலத்தின் R-factor 1-க்கு மேலே இருந்தால் தொற்றுநோய் தொடர்ந்து பரவி வருவதை அது குறிக்கலாம். 2-வது அலையின் உச்சத்தின் போது கூட பாதிக்கப்படாத நாட்டின் சில இடங்களில் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் மக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டு வரும் நிலையிலும் கூட அதிக பாதிப்புகள் பதிவாவதை கவனிக்க முடிகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் கூடுகின்றனர். அதே போல நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இது அபாயகரமானதாக இருக்கலாம். இந்த தளர்வுகள் வரவிருக்கும் வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.

சில மாநிலங்களில் டெல்டா பிளஸ் வேரியன்ட்டால் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் கண்டறியப்பட்டு, அது மெதுவாக வளர்ந்து வரும் வேளையில், வைரஸின் மாறுபாடுகள் தொடர்ந்து ஆபத்தான விகிதத்தில் பரவி வருவது உறுதியாகிறது. தற்போது வரை நாட்டில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 15% மக்களே முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

 இந்த எண்ணிக்கை அல்லது குறைவான மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை வேரியன்ட்கள் மெல்ல மெல்ல பரவ காரணமாக இருக்கலாம். நிலவரப்படி கோவிட்டிக்கு முடிவு இப்போது இல்லை என்பதால், இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட தாக்கங்களை போல தற்போது ஏற்படுவதை தவிர்க்க வழக்கமான கொரோனா பாதுகாப்பு விதிகளை தவறாமல் கடைபிடிப்போம்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES