Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

06 September 2021

கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிய அறிகுறிகள் தோன்றுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை



காது கேளாமை, பயங்கரத் தலைவலி, நாக்கு வறளுதல் - கொரோனாவுக்கு புதிய அறிகுறி

மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை

தொற்றுக்கு புதிய அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், பிரசில், நெதர்லாந்து, ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டன. தற்போது உலகம் முழுவதும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

எனினும் உலகத்தில் இருந்து மறையாத கொரோனா வைரஸ் தொற்று, பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து இன்னனும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறாத நாடு இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கடும் பாதிப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், மேலும் சில நோய் அறிகுறிகள் இருந்தால் அது கொரோனா தொற்றாக இருக்கலாம் என்று எச்சரிக்கை எழுந்துள்ளது. கொரோனா தொற்றின் பிரதான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக்கட்டு, மூச்சுத் திணறல் இல்லாவிட்டாலும், காது கேளாமை, பயங்கரத் தலைவலி, நாக்கு வறளுதல் போன்றவை இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு கொரோனா பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காது கேளாமை, இமைப்படல அழற்சி, கண் எரிச்சல், கடுமையான களைப்பு, நாக்கு வறட்சி, எச்சில் ஊறுவதில் குறைவு, நீண்ட நேர தலைவலி, சருமக் கோளாறுகள் உள்ளிட்டவையும் கொரோனா தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் போது டெல்டா உருமாற்றத்தினால் நிறைய பேருக்கு உணவு குடல் பாதையில் அறிகுறிகள் தோன்றி உள்ளன. இதனால் வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, போன்ற அறிகுறிகள் தோன்றின.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாவிட்டாலும் காது கேளாமை, நீண்டநேர தலைவலி, கண் எரிச்சல், நா வறட்சி போன்றவை இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். - கோவிட் பணிக்குழு எச்சரிக்கை!

source

https://tamil.samayam.com/

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES