Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

01 September 2021

வங்கி திவால் ஆனால் ரூ.5 லட்சம்; இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது






💥🎾💥🎾💥🎾💥🎾💥🎾💥

ஒரு வங்கி திவால் ஆனால், அதில் 'டெபாசிட்' செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்ட தொகை திரும்ப கிடைக்கும் என்ற நிலை தான், அண்மைக் காலம் வரை இருந்து வந்தது.

'டெபாசிட்' தொகை

இந்நிலையில், மத்திய அரசு, இத்தொகையை அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாயாக கடந்த ஆண்டு அதிகரித்து அறிவித்தது. இதற்காக, 'காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக' சட்டத்தில் திருத்தத்தையும் மேற்கொண்டது. தற்போது, இந்த சட்ட திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி, ஒரு வங்கி திவால் ஆனால், டெபாசிட் தொகை வைத்து இருந்த வாடிக்கையாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, 90 நாட்களுக்குள்ளாக கிடைக்கும்.திவால் ஆன வங்கியின் கணக்குகளை பெற்று, அவற்றை எந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை எல்லாம் கண்டறிய, முதல் 45 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இதன் பிறகு, உரிய காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, 90வது நாளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்.

சட்ட திருத்தம்

தறபோது வரை, வைப்புத் தொகைக்கான காப்பீட்டை பெறுவதற்கு, 10 ஆண்டுகள் வரைகூட ஆகும் நிலைதான் இருந்தது. ஆனால் இனி 90 நாட்களில் பணத்தை பெற்றுவிட முடியும். இன்றைய தேதியில் ஒரு வங்கி முடக்கப்பட்டால், அதன் வாடிக்கையாளருக்கு நவம்பர் 30ம் தேதி, காப்பீட்டு தொகை கைக்கு வந்துவிடும். ஒவ்வொரு வங்கியும், அதன் 100 ரூபாய் வைப்புத் தொகைக்கு, 10 பைசாவை காப்பீட்டுக்கான பிரீமியமாக செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

அனைத்து வணிக, வெளிநாட்டு, சிறு, கிராமப்புற, கார்ப்பரேட் வங்கிகள் அனைத்துமே, இந்த வங்கிகள் வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு கீழ் வரும்


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES