Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 July 2021

தேனும் இலவங்கப் பட்டையும் சேர்ந்தால் மருந்து



🌺உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகித்து ஆரோக்கியமாக வாழலாம்.

🌺இலவங்ப்பட்டை பிரியாணியை மட்டுமல்ல வாழ்வையும் நோயின்றி சுவையாக்கும்.

தேனும் இலவங்கப் பட்டையும்!

🌺இத்தகைய இரண்டு மருத்துவ பொருட்களும் சேர்ந்தால் பல நோய்களிலிருந்து மீளலாம்.


இதய நோய்

🌺இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதயத்தின் இரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய இரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

🌺தினமும் காலையில் இலவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் கலந்து ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.

🌺இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் இலவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும். இதய அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் இலவங்கப்பட்டையும்.

செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

ஆர்த்ரிரைட்டீஸ் என்ற முடக்குவாதம்

🌺மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும். எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் குணமாகும். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி இலவங்க பொடியும் கலந்து சாப்பிடலாம். இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

சிறுநீர்குழாய் கிருமிகள்

🌺1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து

🌺2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன். 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி இலவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும். கொலஸ்டிரால் அளவைப் பொறுத்து ஒரு நாளைக்கு இரண்டு வேலை மூன்று வேளை என சாப்பிடலாம் சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.


ஜலதோஷம்

🌺சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே காணாமல் போகும்.

வயிற்று அல்சர்

🌺2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி இலவங்கபட்டை பொடி கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

வாயு தொல்லை

🌺இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!

எதிர்ப்பு சக்தி வளரும்

🌺தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து இலவங்கப்பட்டை பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.

ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

அஜீரணம்

🌺சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது இலவங்கப் பட்டை பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

நீண்ட ஆயுள்

🌺நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும் வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES