Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 July 2021

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் அரசு தொலைக்காட்சி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்குக தேசிய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை



கொரானா நோய் தொற்று காரணமாக மாணவர்கள் சேர்க்கை அரசின் அறிவுறுத்தலின் படி சிறப்பாக நடந்து வருகிறது அரசு பள்ளிகளை நோக்கி இரண்டு லட்சம் மாணவர்கள் வந்துள்ளனர் தற்போது மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில் மாணவர்கள் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகளில் அரசு கவனம் செலுத்த துவங்கி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டிஜிட்டல் பேனர் நகல் எடுத்து மாணவர்களுக்கு வீடுகளுக்குசசென்று கொடுத்து அவர்களை கல்வி தொலைக்காட்சி பார்த்து தினமும் படித்தவற்றை எழுதி வைக்க கூறுகின்றார்கள்
 
 வாட்ஸ்அப் வழியாகவும் மாணவர்கள் செய்தவற்றை ஆசிரியர்களுக்கு அனுப்பி மதிப்பீடும் நடைபெற்றுவருகிறது. தொலைக்காட்சி பெட்டி இல்லாத மற்றும் கல்வி தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மேலும் வாட்ஸ்அப் தொலைபேசி இல்லாத மாணவர்கள்பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்

 எனவே தமிழக அரசு தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு செட்டாப் பாக்ஸ் இணைப்புடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குமாறும் பல்வேறு மாவட்டங்களில் அரசிடம் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் வைக்கிறது மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொடக்க பள்ளிகள் குறைந்த மாணவர்கள் உள்ளதால் காலை மாலை என தகுந்த சமூக இடைவெளியுடன் கூடிய கற்பித்தல் நிகழ்வை நடத்த அனுமதிக்குமாறும் நேரடி கற்பித்தல் மட்டுமே மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் எனவும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம் 

தற்போது நடுநிலை மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளுக்கு இணைய இணைப்பு அரசு உடனடி நிதி ஒதுக்கி ஆவன செய்து கொண்டுவருவது ஆசிரியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது ஒரு சில வாரங்களுக்கு முன் மேல் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்ததை உடன் நடைமுறைப்படுத்துமாறு தேசிய ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது


தமிழ் குமரன் பொது செயலாளர்
மற்றும்
அருணாசலம்
மாநில செய்தி தொடர்பாளர்
தேசிய ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு
பதிவு எண்71/21




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES