Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 July 2021

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு எப்போது? - அமைச்சர் பொன்முடி பதில்



தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார். சுகாதாரத் துறையினருடன் ஆலோசித்து அதன் பின்னர் முதல்-அமைச்சர் முடிவை தெரிவிப்பார் என்று கூறினார்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES