Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 July 2021

ஓய்வு பெறும் வயதினை 60 லிருந்து மீண்டும் 58 ஆக குறைப்பதற்கான திட்டம் உள்ளதா?

தமிழக ஆசிரியர் கூட்டணி, பதிவு எண் 69 /1983 அரசு அறிந்தேற்பு எண் 36/2001.

21.07.2021

பெறுதல்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை-9.

🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨

ஓய்வு பெறும் வயதினை 60 லிருந்து மீண்டும் 58 ஆக குறைப்பதற்கான திட்டம் உள்ளதா? நமது இதயத் துடிப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு அனுப்பி வைப்போம்.

🟪🟧🟪🟧🟪🟧🟪🟧🟪🟧

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை முந்தைய அதிமுக அரசு 58 விருந்து 59தாக உயர்த்திய போது எவரும் விரும்பவில்லை என்பது உண்மை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பேசியதில் உறுதி இருந்தது உண்மை. ஆனால் 59 லிருந்து 60 ஆக உயர்த்திய போது அதில் அவர்களையும் அறியாமல் அந்த முடிவில் ஐக்கியமாகி விட்டார்கள் என்பது தான் எதார்த்தமாகும்.

🟪 முந்தைய அரசு ஓய்வுபெறும் வயதினை நல்லெண்ணத்தில் உயர்த்தவில்லை. பணி நிறைவு பெறும் போது மொத்தமாக ஓய்வூதிய பலன்கள் அளிப்பதற்கு வழி இல்லாததால் தான் ஓய்வுபெறும் வயதினை உயர்த்தினார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

🟪 மக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைவரும் விரும்புகிற அரசினை ஆட்சியில் அமரச் செய்து அழகு பார்த்து வருகிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் கூட ஆகவில்லை இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களில் சிறந்த முதலமைச்சர் யார் என்று ஒரு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட போது தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் தான் முதலிடத்தில் உள்ளார்கள் என்று பதிவு செய்திருக்கிறதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம். எந்த ஆரவாரமும் இல்லாமல் அனைவருக்கும் நன்மையே செய்து வருகிற இந்த நிலைமையில் 50 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஒரே சமயத்தில் பணிகளை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லுகிற மனநிலை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிள்ளைக்கு இதயத்தின் ஓரத்தில் கூட அந்த எண்ணம் எழுவதற்கு வாய்ப்பில்லை என்பதை நாங்கள் உணர்கிறோம்.

🟪 தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதினை மத்திய அரசு போல், பிற மாநிலங்களைப் போல் 60 வயதாக ஏன் உயர்த்தக் கூடாது என கேட்டார்கள். முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் எந்த ஆசிரியர் சங்கங்களும் ஓய்வு பெறும் வயதினை உயர்த்திக் கொடுங்கள் என கோரிக்கை வைக்கவில்லை என சொன்னார்கள். அன்று ஆசிரியர் சமுதாயத்தின் கண்களில் மகிழ்ச்சி கண்ணீர் மல்கியது. வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைப்படி 57 வயதிலும் ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்து வாழ வைத்தவர்,மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளித்து சமூகத்தில் எங்களுக்கு பொது மரியாதையினை பெற்று தந்து உள்ளம் மகிழ்ந்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆவார்கள்.

🟪நிதித்துறையின் ஆலோசனையைக் கேட்டால் சிக்கனத்துக்கு வழி தான் சொல்வார்கள். நாளேடுகளில் செய்தியைப் பார்த்தால் ஓய்வுபெறும் வயதை குறைத்து இரண்டு ஆண்டுகளுக்கு பாண்டு கொடுத்து அனுப்பி விடலாமா என ஆலோசித்து வருவதாக எழுதுகிறார்கள். இதுவெல்லாம் ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு விரோதமாக முந்தைய அரசு செய்து வந்த கொடுஞ் செயலாகும். பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் வளர்ச்சி நல்லாட்சியினை செய்து வரும் தளபதியார் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் பாதுகாவலராக அன்றும் இன்றும் என்றும் இருந்து வருகிறார்கள்.

🟪தந்தி அடிக்கிற ஊருக்கு போய் சேரும் என்பார்கள்; வதந்தி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் என்பார்கள். இல்லாது பிறக்காது, அள்ளாது குறையாது என்பது வட்டார வழக்குச் சொல் .எது எப்படியோ செய்தி பரவலாகி ஆசிரியர்கள், அரசூழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இதயக் கொதிப்பிற்கு ஆளாகி உள்ளார்கள் என்பது எதார்த்தமான ஒன்றாகும்.

🟪மாணவர்கள் தேர்வு எழுத வேண்டுமானால், பள்ளிகள் திறக்க வேண்டுமானால் மருத்துவ நிபுணர்களையும், உளவியல் நிபுணர்களையும் கலந்துகொண்டு செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பகிர்ந்து கொண்டதை கேட்டு வருகிறோம். எங்களது இதயத் துடிப்பினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உணர்வலையாக அனுப்பியுள்ளோம். தமிழ்நாட்டின் விடியல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மீது முழு நம்பிக்கை கொண்டு மன உளைச்சலை தவிர்த்துக் கொண்டு நமது அரசின் மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றுவோம்.

🟪இது தமிழக ஆசிரியர் கூட்டணி என்ற ஒரு சங்கத்தின் குரல் அல்ல ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசூழியர்கள் சங்கங்கங்களின் குரல் ஆகும் என்பதையும் குருதி ஓட்டத்தில் பதிவு செய்கிறோம்.

🟪 ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அரசு,ஊழியர்களின் நம்பிக்கையின் அடையாள முகவரியாக நல்லாட்சிக்கு உற்ற துணையாக இருந்து தூய பணியினை ஆற்றி வருகின்ற எங்களின் போற்றுதலுக்குரிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின் வழியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் உணர்வலைகளை பதிவு செய்து உள்ளோம் என்பதை கனிவுடன் தெரிவித்து கொள்கிறோம். நம்பிக்கை ஒளியில் பாதை தெரிகிறது; எங்களின் பயணமும் தொடர்கின்றது.

🟧🟪🟧🟪🟧🟪🟧🟪🟧🟪

🟪 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அன்பு நிழலில் இயக்கப் பணி ஆற்றிவரும் பொறுப்பாளர்கள்

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.

க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, நல்லதம்பி தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES