Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 July 2021

பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு

பிளஸ்-2 மாணவர்களுக்கான துணைத்தேர்வை எழுதும் தேர்வர்களுக்கான அறிவுரைகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படியே தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அந்த தேர்வில் திருப்தி இல்லாதவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அதேநேரத்தில் தேர்வு நடக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதன்படி, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுத இருக்கும் தேர்வர்களுக்கான அறிவுரைகளை அரசு தேர்வுத்துறை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

* 2020-21-ம் கல்வியாண்டுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, 2021 பிளஸ்-2 துணைத்தேர்வு நடைபெறும். ஏற்கனவே பிளஸ்-2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டம், பழைய நடைமுறையில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த துணைத்தேர்வை புதிய பாடத்திட்டம், புதிய நடைமுறையிலேயே எழுதமுடியும்.

* பழைய பாடத்திட்டத்தில் கலைப்பிரிவில் கணினி அறிவியல், வணிக கணிதம், இந்திய பண்பாடு மற்றும் தொழிற்கல்விப்பிரிவில் உள்ள பாடங்கள் ஆகியவை புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்பாடங்களின் விவரங்களின் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

* ஒவ்வொரு பாடத்தேர்வுக்கும் தலா ரூ.50-ம், இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 என்ற அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்தவேண்டும்.

ஒப்புகைச்சீட்டு

* நேரடி தனித்தேர்வர்களாக முதல் முறையாக பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விரும்புவோர், பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியபின்னரே, பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத வேண்டும்.

* ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே அதனை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.

* தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

ஆவணங்கள்

* ஆன்லைன் பதிவின்போது கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் முறையாக வழங்கினால் மட்டுமே தேர்வர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

* தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் தகுதி மற்றும் விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES