Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 July 2021

15 நாட்களில் புதிய ரேஷன் கார்டை பெறலாம்... என்னென்ன ஆவணங்கள் தேவை!



ரேஷன் கார்டை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இப்போது 15 நாளில் ரேஷன் கார்டை பெறமுடியும்.

குடும்ப வருமானத்தைப் பொறுத்து 5 வகை ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உங்களுக்கு ஏற்ற ரேஷன் கார்டை தேர்தெடுத்து விண்ணப்பிக்கலாம். கார்டு எந்த வகையைச் சார்ந்தது என ரேஷன் கார்டில் இருக்கும் குறியீட்டைப் பார்த்து தெரிந்து உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

5 வகை ரேஷன் கார்டுகள்

பிஎச்எச் (PHH) என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.

பிஎச்எச் - ஏஏஒய் (PHH - AAY) என்ற குறியீடுள்ள ரேஷன் கார்டிற்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றலாம்.

என்பிஎச்எச் (NPHH) என்று குறிப்பிடப்பட்டுள்ள ரேஷன் கார்டிற்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

என்பிஎச்எச் - எஸ் (NPHH - S) என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டில் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைப் பெறலாம். ஆனால், அரிசி கிடைக்காது.

என்பிஎச்எச் -என்சி (NPHH - Nc) என்ற குறியீடுடைய ரேஷன் கார்டை அடையாள அட்டையாகவும், முகவரிக்கான சான்றுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அடைடையைக் கொண்டு நியாய விலைக்கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது.



பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க வேண்டும்

புதியதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி தனியாக பிரித்து கார்டு வாங்குவது என்ற விவரத்தை முதலில் தெரிந்து கொள்வோம். இதற்கு முன்னதாக உங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும். இதற்காக சரியான ஆவணங்களை கொடுத்து (திருமண பதிவு சான்று அல்லது தக்க சான்றுகள்) பெயர் நீக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னரே புதிய கார்டை விண்ணப்பிக்க முடியும். தமிழ் நாட்டில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பததாரரின் பெயர் வேறு எந்த ரேஷன் கார்டிலும் இருக்க கூடாது.

தேவையான ஆவனங்கள்

நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்யலாம். குடும்பத் தலைவர் யாரோ அவரின் புகைப்படம் 5 MB ஆக குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு யாரெல்லாம் புதியதாக ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமோ அவர்களின் ரேஷன் கார்டு, சொந்த வீடாக இருந்தால் வீட்டு வரி ரசீது, வாடகை வீட்டில் இருந்தால், வாடகை ஒப்பந்தம் தேவை. உங்களுக்கு ஏற்கனவே கேஸ் இணைப்பு உள்ளது எனில் அதன் விவரங்களும் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி இல்லை என்றால் கேஸ் இணைப்பு இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட இந்த ஆவணங்கள் இருந்தாலே போதுமானது உங்களுக்கு ரேஷன் கார்டு 15 - 20 நாட்களில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் ரேஷன் அட்டை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் என தமிழக ஆளுனர் சட்ட பேரவை உரையில் கூறினார். முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும். அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.

அதன் பிறகு மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், இ மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்கவும். அத்துடன் விண்ணப்பத்தில் குடும்ப தலைவருக்கான போட்டோ என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.

அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன வகை அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவும். பின்னர், இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம். இது 1 MB அளவில் இருக்க வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றையும் கொடுக்கலாம்.

பின்னர், உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்கவும். அதில் ஏற்கெனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும். அதில் இல்லாதவற்றை தேர்வு செய்தும் கொடுக்கலாம். இறுதியாக, ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அவருடைய பெயர் என்ன? குடும்பத் தலைவருக்கு என்ன உறவு? மனைவி, மகன் அல்லது மகள், என்பதை கொடுக்க வேண்டும். அவருடைய விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் தேவை. உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் திருத்தம் எனில் அதனை கிளிக் செய்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.

சமையல் எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள்

பின்னர், சமையல் எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் பகுதியில், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை கொடுக்க வேண்டும். சமையல் எரிவாயு இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளன என்ற விவரங்களை கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவையா என்பதை கவனமாகப் பார்த்தபிறகு, உறுதிப்படுத்துதல் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

உங்களிடம் சமையல் எரிவாயு இணைப்பு ஒன்று மட்டும் உள்ளது எனில் ஒன்றில் மட்டும் கொடுத்தால் போதும். இரண்டிலும் இருந்தால் இரண்டிலும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும். ஒவ்வொன்றிலும் எத்தனை சிலிண்டர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.

அதேபோல உங்கள் விவரங்கள் சரியாக இருக்கினறதா என்பதையும் கவனமாகப் பார்த்து, பதிவு செய் என்பதை கொடுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது சிகப்பு நிறத்தில் காண்பிக்கும். அவ்வாறு காண்பித்தால், அதனை மீண்டும் சரிபார்த்து பதிவு செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்பதை கிளிக் செய்யுங்கள்.

ரேஷன் கார்டு


குறிப்பு எண்ணை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

இப்போது உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என காண்பிக்கும். அதில் ஒரு குறிப்பு எண்ணும் வரும். அதனை குறிப்பெடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த எண்ணை வைத்துதான் உங்களின் ரேஷன் கார்டு பணிகள் எந்த கட்டத்தில் இருக்கின்றன என்பதை அறிய முடியும். பின்னர் உங்களது ஆதார் கார்டு, போட்டோ, விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில் (TSO) கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்களது விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்படும்.

நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இந்த நடைமுறைகளுக்கு முன்பெல்லாம் இரண்டு மாதங்கள் வரை ஆகின. ஆனால் இப்போது 15 நாட்களில் ரேஷன் கார்டைப் பெற முடியும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ரேஷன் கார்டை அப்ளை செய்யுங்கள், 15 நாளில் ரேஷன் கார்டை பெற்று மகிழுங்கள்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES