Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 July 2021

ஜூலை 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் அனைத்து துறைகளிலும் கடுமையான வருவாய் இழப்பும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இந்த நெருக்கடியைச் சமாளிக்க வாகனங்களின் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளன. அதேபோல, எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தித் துறையிலும் விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 4ஜி
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வை இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் தொழில் புரியும் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. விநியோகச் சங்கியிலில் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில், பல்வேறு மாடல்களைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


ஜூலை 1 முதல் ஸ்மார்ட் டிவிகளின் விலையை 3 முதல் 6 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளதாக க்ஷியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஒப்போ ஏ11, ஏ15-எஸ், ஏ53 உள்ளிட்ட போன்களின் விலையை ரூ.500 முதல் ரூ.1,000 வரையில் உயர்த்தியுள்ளது ஒப்போ நிறுவனம். சி11, சி20, சி25 உள்ளிட்ட மாடல்களின் விலையை ரூ.200 முதல் ரூ.500 வரையில் உயர்த்தியுள்ளது ரியல்மீ நிறுவனம். இதுபோன்ற மற்ற நிறுவனங்களும் கணிசமான அளவில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன.

கொரோனா நெருக்கடி சமயத்தில் இவற்றின் விலை உயர்த்தப்படுவது வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES