இந்த தேர்வு முறையால், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா; பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான மாற்று சேர்க்கை முறைகளை வகுக்க வேண்டும்.அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்நிலை குழு அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி உயர்நிலை குழுவை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நடவடிக்கைகுழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத், ஜவஹர்நேசன், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சட்டத்துறை அரசு செயலர், மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் செயலராக, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இக்குழு உரிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து, தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனை பாதுகாக்க தேவையான பரிந்துரைகளை, ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அளிக்கும். குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ளும்.
source www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE