Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 June 2021

தொலைந்த செல்போனை சில நிமிடங்களில் கண்டுபிடித்து லாக் செய்வது எப்படி?

செல்போன்களை பலரும் தெரியாமல் தவற விட்டுவிடுவோம். அப்படி தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம்.

அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலை வேண்டாம்.


அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.

அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

find my device

find my device மூலம் இதை எளிதான செய்ய முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்.. பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும். lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES