Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 June 2021

இளம் எழுத்தாளர்களுக்கு இலக்கிய பயிற்சி திட்டம்



இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 75 பேருக்கு, ஆறு மாதங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க, மத்திய அரசு முன்வந்துள்ளது.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், சர்வதேச தரத்தில் இலக்கியங்களை படைக்கவும் வழிகாட்டும் வகையில், மத்திய ஊக்கத் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க முன்வந்து உள்ளது. நாடு, சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆன நிலையில், 30 வயதுக்குட்பட்ட, இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்தும், இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய கலாசாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய வளம், மொழி வளம், கலைகள் உள்ளிட்டவற்றை வாசித்தும், அறிந்தும், புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், இந்த திட்டத்தை, பிரதமர் அறிவித்து உள்ளார்.

உலகில் அதிக இளைஞர்களைப் பெற்றிருக்கும் நாட்டில், தற்போதுள்ள சூழலில், இளைஞர்களின் சிந்தனையை மேம்படுத்தி, ஆரோக்கியமான எதிர்காலத்தை திட்டமிடும் வகையில், இது செயல்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்திற்கு, innovateindia.mygov.in/yuva/ என்ற, இணையதள பக்கத்தின் வழியாக விண்ணப்பித்து, அடுத்த மாதத்துக்குள், தங்களின் படைப்புகளை, இளைஞர்கள் பதிவேற்ற வேண்டும்.

தேசிய அளவிலான போட்டியில், தகுதியான, 75 படைப்புகளை, இந்திய அரசின், என்.பி.டி., என்னும் தேசிய புத்தக அறக்கட்டளையின் வல்லுனர் குழு தேர்வு செய்யும். அந்த படைப்புகள், வரும் சுதந்திர தினத்தில், இந்திய அரசு இணைய தளத்தில் பதிவேற்றப்படும். அடுத்தாண்டு இளைஞர் தினமான, ஜன., 12ல், நுாலாக வெளியிடப்படும். சிறந்த படைப்புகளை எழுதிய, 75 பேருக்கு, மூன்று மாத இலக்கிய பயிற்சியை, தேசிய அளவில் சிறந்த எழுத்தாளர்கள் அளிப்பர்.

மேலும், புத்தகக் கண்காட்சி, மெய்நிகர் புத்தகக் கண்காட்சி, கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும். அத்துடன், ஆறு மாதங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கி, சிறந்த இலக்கியங்களை படைக்கும் வகையில், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். பின், இந்த எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புகள், தேசிய புத்தக நிறுவனத்தின் சார்பில், நுால்களாக்கப்பட்டு, இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும். அந்த புத்தகங்களின் விற்பனையில், 10 சதவீதம் காப்புரிமையாகவும் வழங்கப்படும்.

இந்த திட்டம், 30 வயதுக்குட்பட்ட தமிழ் எழுத்தாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால், அதிகளவில் பங்கேற்று, தமிழின் தொன்மை, தமிழக கலாசாரத்தை வெளிப்படுத்தும்படி, மூத்த எழுத்தாளர்கள் அறிவுறுத்திஉள்ளனர்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES