Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 June 2021

பிளஸ்-1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.



கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறையாததால் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித்தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டன.

 தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது

உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால் அந்த தேர்வை ரத்து செய்வது மட்டும் தாமதமானது. தற்போது அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கு செல்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடாக 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 சேர்க்கை நடத்தலாம் என அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

 கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மாணவ-மாணவிகளை அழைத்து மாணவர் சேர்க்கை நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் அந்தந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பின்னரே மற்ற பள்ளிகளில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சேர விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை முழுவதுமாக முடிவடைந்த பிறகு மற்ற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்திருக்கின்றன.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES