Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 May 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் 6ஆம் தேதி முதல் அமல்


மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 வரை திறக்க அனுமதி - மற்ற கடைகள் திறக்க தடை - தமிழக அரசு

தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறப்பதற்கு மதியம் வரை மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

புதிய கட்டுப்பாடுகள்:

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கையில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர தனியாக செயல்படுகின்றன மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள் பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல எந்த தடையுமின்ற செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு *வரும் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு


🅱REAKING


✅கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்.!


✅மே-6 ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:


✅ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.


✅ஊரகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.


✅இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லை.


✅நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.


✅அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.


✅மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்.


✅காய்கறி, பலசரக்கு, பழ கடைகள் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.


✅ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.


✅ஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதி.


✅உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி.


✅பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.


✅திருமண நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.


✅சமுதாயம், அரசியல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு, இதர விழாக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை.


✅திறந்த வெளி மற்றும் உள் அரங்கங்களில் விழாக்கள் நடத்தவும் அனுமதி இல்லை.


✅மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை.


✅நோய் பரவலை கட்டுப்படுத்த மாஸ் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.













No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES