Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 May 2021

கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை தடுப்பூசி போடலாமா தமிழக அரசு

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நாம், சற்று தைரியத்துடன் வெளியே நடமாடக் காரணம். கொரோனா தடுப்பூசி. கொரோனா என்ற கொடும் நோய்க்கிருமியை கட்டுப்படுத்த உலக நாடுகளே ஒன்றிணைந்து போராடிவருகிறது. இதுவரை வரலாற்றில் நிகழ்ந்திராத ஒரு சாதனையாக, மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் முன்களப் பணியாளார்களுக்கு முன்னுரிமை அளிக்கும்விதமாக, அவர்களுக்கு முதல்கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசியைப் பொறுத்தவரை பல சந்தேகங்களையும் கேள்விகளையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தற்போது தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ள நிலையில், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த சந்தேகம் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் பெரும்பாலும் விவாதிக்கப்படும் ஒன்றாக உள்ளது.

முன்கள கர்ப்பிணி பணியாளர்களும் தடுப்பூசியும்

மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற முன்கள பணியாளர்களில் கர்ப்பிணிகளும் அடக்கம். தடுப்பூசி சோதனையில் கர்ப்பிணிகள் உட்படுத்தப்படாததால் இந்த தடுப்பூசி தாய் மற்றும் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஏதேனும் பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து சிடிசி மற்றும் ஏசிஐபி போன்ற சுகாதார நிறுவனங்கள் கூறுகையில், 'முன்களப் பணியாளர்களில் உள்ள கர்ப்பிணிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்குமுன், அவர்கள் நிபுணரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது' என்று வலியுறுத்துகின்றன..








No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES