Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 April 2021

பட்டதாரி ஆசிரியர்களுக்கே தலைமையாசிரியர் பதவி - உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதன் மீது விரைவில் விசாரணை நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தின்படி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை தட்டிச் சென்றனர்.

ஒரு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக செல்கிறார். அந்த பதவியில் அவர் ஊதிய உயர்வு மற்றும் ஒரு வருடம் கழித்து தகுதிகாண் பருவம் பெற்றுக் கொள்கிறார். ஆனால், அவர் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள சீனியாரிட்டி பெற்றுக் கொண்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்கிறார்.

இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாமலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்காமலும் அவதியுறுகின்றனர்.

மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஊக்க ஊதிய உயர்வு பெற்றுக்கொண்டு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதே ஊதியத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக மாறுகின்றனர்.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஊதியமும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஊதியமும் ஒன்றே. ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே வகிக்கவேண்டும். ஒருவர் இரண்டு பதவியில் பணியாற்றக் கூடாது என்பது நமது பேரியக்கத்தின் கோரிக்கை.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக சென்றால் அடுத்த பதவி உயர்வு நிலையான மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கே செல்ல வேண்டும்.

ஆனால் ஒரே ஊதியத்தில் இரண்டு பதவிகளை வகிப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டி நமது பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். பக்தவத்சலம் தலைமையில் 21 பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.


kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN 

TELEGRAM GROUP


WHATSAPP GROUP


"Kindly share to all"


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials Whatsapp – 9444555775



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES