Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 April 2021

தமிழ் வருடப்பிறப்பு தை / சித்திரையா தமிழாய்ந்த தமிழ் புலவர்கள் கூறுவது என்ன? நீங்களே படித்து தெளிவடையுங்கள்

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர்.


60 நாழி கையை ஒரு நாளாகவும், ஒரு நாளை 
வைகறை, 
காலை, 
நண்பகல், 
எற்பாடு, 
மாலை, 
யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் 

ஓர் ஆண்டை
இளவேனில்,
முதுவேனில்,
கார்,
கூதிர்,
முன்பனி,
பின்பனி என்று ஆறு பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துனைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக் கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்ற வில்லை என்பது வியப்பாக இருக்கிறது

நாட்டுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமை யாமையை அரசர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துக் கூறியதாகவும் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம்  கடவுள், மதம், சாதி, மூடநம்பிக்கைச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுமுறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

தமிழ் ஆண்டுகளின் கதை

60 ஆண்டுகள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனைகதை முன்வைக்கப்படுகிறது. அந்தக் கதையின் சுருக்கம் இது:

ஒரு முறை நாரத முனிவர் மோகத்தால் தாக்கப்பட்டார். கிருஷ்ணனிடம் போய் அவருடைய 60 ஆயிரம் காதலிகளில் ஒருவரையாவது தனக்குத் தரக் கூடாதா என்று வேண்டியுள்ளார். “என்னைத் தன் மனதில் வைக்காத ஏதேனும் ஒரு பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் அவர். அப்படிப்பட்ட பெண்ணைத் தேடிஅலைந்தும் நாரதரால் காண முடியவில்லை.அதனால் நாரதர் கிருஷ்ணனிடமே வந்து “நானும் ஒரு பெண்ணாகி உங்களோடு இருந்துவிடுகிறேன்” எனச் சொல்ல, கிருஷ்ணன் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி, அவருடன் 60 வருடம் வாழ்ந்து 60 மகன்களைப் பெற்றார் என்பது ஒரு கதை

1. பிரபவ
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய

" 60 ஆண்டுப் பெயர்களும் சித்திரை ப் புத்தாண்டும் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி.78 இல் எற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வட மொழிப் பெயர்களாய் உள்ளன."

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. 60 ஆண்டுகளின் பெயர்கள், கிருஷ்ணனும் நாரதரும்  செய்து பெற்ற பிள்ளைகள் என்ற கதையை மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எனவே, ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நமச் சிவாயர் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர்; அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.

தமிழ் புத்தாண்டு

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் சில:-

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்றுஎன்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

முன்காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்த தில்லை ; தை முதல் நாள் தான் வருடப்பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்' - மூதறிஞர் மு. வரதராசனார்

'தைப் பொங்கல் திருநாள் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும்' - அறிஞர் நாரண துரைக்கண்ணன்

'தை முதல்நாள் தைப்புத்தாண்டின் தொடக்க நாள் என்பது தெள்ளிதின் புலனாகும். அறிவியல் அடிப்படையில் இது ஏற்கத்தக்கதுமாகும்' - டாக்டர் மெ. சுந்தரம்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை 1935ஆம் ஆண்டில் திருச்சியில் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழர் மாநாட்டில் தந்தை பெரியார் ஏற்றுக்கொண்டார்.

'தை முதல் தமிழினத்தின் ஆண்டு முதல் நாள்' - பேராசிரியர் செல்வி பாகீரதி

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூண் இருக்கையின்"
"தைஇத் திங்கள் தண்கயம் படியும்"

- நற்றிணை.

***************************

"நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து"

- ஐங்குறுநூறு.
****************************
"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ"

"இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்"

-கலித்தொகை .
***************************
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்"

- குறுந்தொகை

***************************

""தைஇத் திங்கள் தண்கயம் போல்"

-புறநானூறு


“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
!”
-பாரதிதாசன்.

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்

தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன

'தை முதல் நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளும் இதுவே. தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை நாம் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்' - தலைவர் கலைஞர் மு. கருணாநிதி

ஈரடியில் பொய்யா மொழி
ஈரோட்டு அய்யா மொழி
அறிஞர் அண்ணாவின் அறிவுவழி
அனைத்துமே தமிழர் உய்யும் வ
ழி

ஆகவே


என்பதை உணர்ந்த  தமிழர்கள் தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்றுக் கொண்டாடுவார்கள்






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES