Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 April 2021

எது பாவம்? எது புண்ணியம்? 32 வகை தர்மங்கள், 42 வகை பாவங்களின்


பிற உயிர்கட்குச் செய்யும்
புண்ணியங்கள் என 32 வகை தர்மங்கள்

1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் கட்டிவைப்பது.

2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு உணவு வசதி அளிப்பது.

3. அறுவகைச் சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.

4. பசுவுக்கு வைக்கோலும் புல்லும் வழங்குவது.

5. சிறைச் சாலையில் துன்புறுவோர்க்கு சோறளிப்பது.

6. வீடு தேடி வரும் ஆதரவற்ற ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.

7. தின்பண்டம் நல்கல்.

8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகட்குச் சோறளிப்பது.

9. தாய்மைப் பேறுபெற்ற பெண்கட்கு உதவி செய்வது.

10. அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.

11. அனாதைப் பிணங்களை அடக்க்கம் செய்வது.

12. வாசனைப் பொருள்களை அளிப்பது.

13. நோயாளிகட்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.

14. துணிவெளுக்கும் தொழிலாளர்க்கு உதவி செய்வது.

15. நாவிதர்க்கு உதவிகள் செய்வது.

16. ஏழைப் பெண்கட்குச் காசோலை கொடுத்து உதவுவது.

17. ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.

18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.

19. திருமணமாகாத ஏழைப் பையனுக்குத் திருமணம் செய்து வைப்பது.

20. பிறர் துன்பம் தீர்ப்பது.

21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.

22. மடம் கட்டிச் சமய அற்இவை வளர்ப்பது.

23. சாலைகளை அமைத்துக் கொடுப்பது.

24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.

25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது.

26. விலங்கினங்கட்கு உணவளிப்பது.

27. ஏறு விடுதல்.

28. விலை கொடுத்து உயிரைக் காப்பாற்றுதல்.

29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.

30. குழந்தைகட்குப் பால் வழங்குதல்.

31. கண்ணாடி வழங்குதல்.

32. அறவைத் தூரியம்.


 42 வகை பாவங்களின்
வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்....

அவை:

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES