Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 March 2021

புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்-தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அசத்தல்

கொரோன காலத்திலும் வீட்டிலிருந்தபடியே தேர்தல் விழிப்புணர்வில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதி அனுப்பினார்கள்.

இந்த நிகழ்வில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகள் அஞ்சல் அட்டை வாயிலாக தங்கள் சக மாணவ நண்பர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.தேர்தலில் 100 சதவிகித வாக்காளர்களை வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் இணையம் வழியாகவும்,அலைபேசி வழியாகவும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு அதே வகுப்பில் பயிலும் மற்ற மாணவ நண்பர்களின் பெற்றோர்கள் வீட்டு முகவரிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை வழியாக கடிதம் எழுதுமாறு அறிவுரை வழங்கினார்கள் . இதனை அறிந்து தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் புதிய முறையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், என் வாக்கு ,என் உரிமை - என் வாக்கு விற்பனைக்கு இல்லை என்பதையும் பொதுமக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அஞ்சல் அட்டையில் "விலை மதிப்பில்லா வாக்கினை மறவாதீர் ,அனைவரும் 100% வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை வலுபடுத்துங்கள் " தேர்தல் நாள் ஏப்ரல் -06 என்ற வாசகத்தை எழுத வலியுறுத்தினர்.கொரோன காலத்திலும் இளம் வயது பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் 100 சதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் , முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,கருப்பையா ஆகியோர் இருந்தனர்.

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் சக மாணவ நண்பர்களின் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதி அனுப்பினார்கள்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES