Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 March 2021

இருப்பிடத்திற்கு அருகில் தேர்தல் பணி வழங்க கோரிக்கை

தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இருப்பிடத்திற்கு அருகில் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், தவமணி, சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு உள்ளதால் அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலைபள்ளி வகுப்புகளில் கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

கொரோனா காலமாக இருப்பதால், மருத்துவ காரணங்களால் இயலாதவர்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி விலக்கு அளிக்க வேண்டும். தேர்தல் பணி அலுவலர் நியமனத்தில் முதுநிலை ஆசிரியர்களின் பணித்தொகுதியை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய பணிகளான வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அதற்கு மேற்பட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தபால் வாக்குகள் முழுமையாக செலுத்தப்படும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகளும், பிரச்னைகளை தெரிவித்து களைய ஹெல்ப் டெஸ்க்கும் அமைத்து தர வேண்டும். 

வாக்குச்சாவடிகளுக்கு சென்று பணியாற்றவும் வாக்குப்பதிவு முடிந்து திரும்பவும் போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு இருப்பிடத்திற்கு அருகாமையில் பணியமர்த்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN 

TELEGRAM GROUP


WHATSAPP GROUP


"Kindly share to all"


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials Whatsapp – 9444555775

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES